வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை...

வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை...

அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண்ணை ஒருவர் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தன்னை பாதுகாக்க அந்த போதை ஆசாமியைத் தாக்கிய பெண்ணையே மீண்டும் தாக்கியுள்ளார் ஒரு நபர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on

சென்னை : அடையாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மடிபாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அதில் ராம் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ஒரு நபர் தன்னை இடித்து கீழே தள்ளியதாகவும் , அப்பொழுது தன்னிடம் தவறாக நடக்கும் முற்பட்ட போது தான் தற்காத்து கொள்ள அடித்ததாகவும் , அவர் தன்னை கடுமையாக தாக்கிவிட்டு ஆபாசா வாரத்தைகளால் திட்டிவிட்டு தப்பியோடி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப்புகாரில் தெரிவித்திருந்தார். 

அந்த புகாரின் அடிப்படையில் சம்ப இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த உதவி ஆணையர் பிராங்கிளின் ரூபன் தலைமையில் உதவி ஆய்வாளர் நிர்மல் , மணிமாறன் உள்ளீட்ட தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் வேளச்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பதும், இவர் தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும், மது போதையில் வேளச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து திட்டமிட்டு செய்ததும் தெரியவந்தது. அதனை அடுத்து அவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று இரவு சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பின் தொடர்ந்து வந்த நபர், பெண்ணின் இருசச்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளுவதும், இதில் மழையால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தில் அந்த பெண் கீழே விழவே அந்த நபர் உதவி செய்வது போல பேச்சு கொடுத்தப்படியே சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் சுத்தம் செய்யும் போது அந்த நபர் பெணிடம் அத்து மீறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அவரிடம் இருந்து தற்காத்து கொள்ள அவரை அடித்து திட்டுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த  அந்த நபர் அவரை கடுமையாக தாக்கி இரும்பு கேட்டில் தலையை இடித்து கடுமையாக தாக்கும் பதற வைக்கக்கூடிய காட்சிகளும் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com