ஆன்லைன் ரம்மியால் முடிந்த கதை! 5 லட்சம் இழந்து இளைஞர் தற்கொலை!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்சத்தை இழந்த பட்டதாரி இளைஞர், தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் ரம்மியால் முடிந்த கதை! 5 லட்சம் இழந்து இளைஞர் தற்கொலை!

ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சுரேஷ் B.COM படித்து விட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கிய அவர், நாளடைவில் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி 5 லட்சம் ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சலில் இருந்து சுரேஷ், வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர், நண்பர்களிடம் கடனாக பெற்ற பணம் அனைத்தையும் ரம்மியில் இழந்து விட்டேன். மேலும் ஆன்லைன் ரம்மியில் இருந்து மீள முடியவில்லை என்றும்,  Bye Bye Miss U ரம்மி  என கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சுரேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன் லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, ஆன் லைன் ரம்மி விளையாட்டின் மூலம் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடை செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.