இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த பெண் - போலீசார் விசாரணை

சென்னை அடுத்த மணலி பகுதியில் இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த பெண் - போலீசார் விசாரணை

மணலி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த்.  இவருக்கும் இவரது மனைவி யமுனாக்கும் கடந்த  மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் வீட்டின் இரண்டாம் தளத்தில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த யமுனா தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், குழந்தையை  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் இறந்த குழந்தையை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு யமுனா கொண்டு சென்றுள்ளார்.  குழந்தை இறந்தது தொடர்பாக மருத்துவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.