வெளிநாட்டு காதல் மோகம்..? மனைவி போட்ட மாஸ்டர் பிளான்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. கம்பி என்னும் அரசியல் மூலை

கள்ளக்காதலனுடன் நிம்மதியாக வாழ இடையூறாக இருக்கும் கணவனை மாஸ்டர் பிளான் போட்டு போலீசில் மாட்டி விட்டு இறுதியில் தானே மாட்டிக்கொண்டு ஜெயிலில் கம்பி எண்ணும் மனைவி.

வெளிநாட்டு காதல் மோகம்..? மனைவி போட்ட மாஸ்டர் பிளான்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. கம்பி என்னும் அரசியல் மூலை

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுமியா - சுனில் வர்கீஸ் தம்பதி. வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வேலை பார்த்து வருகிறார் சுனில் வர்கீஸ்.  மனைவி சவுமியா வண்டன்மேடு பஞ்சாயத்தின் சிபிஐ(எம்) உறுப்பினராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் சுனிலின் மனைவி சவுமியாவிற்கும், சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வினோத் என்பவருக்கும் போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவே ஒரு கட்டத்தில் தகாத உறவாக உருவெடுத்து, நாளடைவில் சவுமியாவுக்காகவே வினோத்,  தனது குடும்பத்தை சவுதியிலேயே  விட்டுவிட்டு கேரளாவுக்கு அடிக்கடி வந்து போயிட்டு இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில நாட்கள் சவுமியா வீட்டில் தங்கிவிட்டும் சென்றுள்ளார். இப்படியே ரகசியமாக சந்தித்து கொண்ட இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தனர். ஆனால், அதற்கு சவுமியாவின் கணவர் சுனில் தடையாக இருப்பதால் அவரை கொன்றுவிட முடிவு செய்தனர்.

இருப்பினும்  கணவனை நேரடியாகவே கொன்றுவிட்டால் தாங்கள் ஜெயிலுக்கு போக வேண்டி வரும் என்பதால், சுனிலை எப்படியாவது போதை வழக்கில் சிக்க வைத்துவிட்டால் நீண்ட நாட்கள் சிறையில் இருக்க நேரிடும் என்பதால் அந்த பிளானையே ஒர்க் அவுட் செய்ய முடிவு செய்தார்கள். அதன்படி  பிப்ரவரி 22ம் தேதி எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷெஃபின் மற்றும் ஷானவாஸ் ஆகியோரிடம் இருந்து 45,000 ரூபாய்க்கு போதை மாத்திரைகளை வாங்கி வந்து சுனிலின் பைக்கில் வைத்துவிட்டார் சவுமியா. கையுடன் போலீசுக்கும் தகவல் தந்துவிட்டார். 

அதன்பேரில் உடனடியாக  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுனிலின் பைக்கில் இருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசிடம் வாதாடிய சுனில் பைக்கில் இந்த போதை மருந்து எப்படி வந்ததென்று எனக்கு தெரியாது என மறுத்துவிட்டார். இதனால் போலீசுக்கே சுனில் மீது ஓரளவு நம்பிக்கை வந்ததால், இறுதியில் சுனில் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு பிறகு போலீசாரின் பார்வை முழுவதும் சவுமியா பக்கம் திரும்பியது. இதனால் சவுமியாவை விசாரிக்க தொடங்கிய போலீசார் அவரின் செல்போனையும் டிரேஸ் செய்ததில், அவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு போன் செய்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்து அது வினோத் என்பதையும் உறுதி செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், போதை மருந்தை பைக்கில் வைத்தது முதல் கள்ளக்காதலனை திருமணம் செய்ய போகும் விஷயம் வரை அனைத்தையும் சவுமியா ஒப்புக்கொண்டதால் அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இறுதியில், இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த ஷெஃபின் மற்றும் ஷானவாஸ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால், கள்ளக்காதலன் வினோத் தலைமறைவாகி விட்டதால் போலீசார் அவரை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.

மேலும் கணவனை ஜெயிலுக்கு அனுப்பினால் நிம்மதியாக வாழலாம் என்று தப்பு கணக்கு போட்ட சவுமியா, தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி உள்ளார்.