பணம், செல்போனுக்கு ஆசைப்பட்டு கொரோனா நோயாளியை கொலை செய்த மருத்துவமனை ஊழியர்...

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் கிடந்த சடலமாக மீட்கப்பட்ட சுமிதா வழக்கு, சந்தேக மரணமாக இருந்த நிலையில் தற்போது கொலை வழக்காக காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

பணம், செல்போனுக்கு ஆசைப்பட்டு கொரோனா நோயாளியை கொலை செய்த மருத்துவமனை ஊழியர்...

சென்னை மேற்குத் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பல்கலைகழக பேராசிரியர் மௌலி,  தனது மனைவி சுமிதா-விற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 3வது மா டியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

 பின் 23 ஆம் தேதி சுமிதா-விற்கு உணவுகொடுக்க மௌலி சென்றபோது அவர் காணாமல் போனதால் மருத்துவமனை நிர்வாகத்திடமும், ராஜீவ்காந்தி மருத்துவமனை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

கடந்த 8 ஆம் தேதி மருத்துவமனையின் 8-வது மா டியில் உள்ள மின் பகிர்மாக அறையில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் அடுத்து அது காணாமல் போன சுமிதா என்பது தெரிய  வந்தது.

இதனையடுத்து காவல் துறையினர் சந்தேக மரணம் என்ற அ டிப்படையில் வழக்குப்பதிவு செய்து சி.சி. டி.வி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டதோடு, மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பெண்ணின் கணவரான மௌலியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது ராஜீவ் காந்தி அரசு மதுத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர் ரதி தேவி என்பவர்தான் பணம் மற்றும் செல்போனுக்காக ஆசைப்பட்டு பேராசிரியரின் மனைவி சுமிதாவை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை காவல் நிலைய போலீசார் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.