கிரடிட் கார்டு தகவல்களை திருடி கரண்ட் பில்... நூதன முறையில் மோசடி செய்த நபர்கள் கைது...

கிரெடிட் கார்டு தகவல்களை திருடி டெல்லி மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்தி நூதன முறையில் மோசடி செய்து பணத்தைக் கொள்ளையடித்த வடமாநில கும்பலைச் சேர்ந்த இருவரை டெல்லியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கிரடிட் கார்டு தகவல்களை திருடி கரண்ட் பில்... நூதன முறையில் மோசடி செய்த நபர்கள் கைது...
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, தனது கிரெடிட் கார்டு தகவல்களை திருடி பணத்தை கொள்ளை அடித்ததாக புகார் அளித்துள்ளார். குறிப்பாக எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் கிரெடிட் கார்டுக்கு பரிசு தொகை மற்றும் பரிசுப்பொருள் விழுந்திருப்பதாகவும், உடனடியாக உங்கள் கார்டு தகவல்களைக் கூறி பரிசுப்பொருள் விழுந்த கிரெடிட் கார்டு தானா என உறுதி செய்து கொண்டால்,  அந்த பரிசுப்பொருள் உடனடியாக வழங்கப்படும் என ஆசைவார்த்தை காட்டியதாகவும்,. உடனடியாக தெரிவிக்காவிட்டால் பரிசுப் பொருள் கிடைக்காது எனக் கூறியதால்  கிரெடிட் கார்டு தகவல்களை கொடுத்துள்ளார். அவ்வாறு அனுப்பினால் otp எண் அனுப்புவோம், அதையும் உடனடியாக தெரிவிக்கவேண்டும் என கூறியதாக கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். இதனை நம்பி கிரெடிட் கார்டு தகவல்கள் மற்றும் OTP யை கொடுத்தவுடன், தன்னுடைய கிரெடிட் கார்ட் கணக்கிலிருந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 640 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து உள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மோசடி கும்பல் பயன்படுத்திய செல்போன் நம்பர்களை ஆய்வுசெய்தனர். ஆய்வு செய்ததில் டில்லியில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்து வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் முகாமிட்டு தனிப்படை போலீசார் டெல்லி ஜோரிபூரியை சேர்ந்த அதுல்குமார், மொத்தம் காசியாபாத் தைச் சேர்ந்த குணால் ஆகியோரை கைது செய்தனர். பின் டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ட்ரான்சிட்  வாரன்ட் பெற்று சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர்.
 
முன்னதாக பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தியதில், டெல்லி, பீகார் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்யும் கும்பல்களுக்கு உடந்தையாக இருவரும் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு ,கேரளா உள்ளிட்ட இடங்களில்,க்ரெடிட் கார்டு வைத்திருப்பவரர்களை செல்போன் மூலம்  தொடர்பு கொண்டு,வங்கி அதிகாரிகள் பேசுவது போல் பேசி கிரெடிட் கார்டு தகவல்களை திருடி கொள்ளை அடிப்பதாக தெரிவித்துள்ளனர். கிரெடிட் கார்டுக்கு பரிசுப் பொருள் மற்றும் பரிசு தொகை விழுந்துள்ளதாகவும், உடனடியாக கிரெடிட் கார்ட் தகவல்கள் தெரிவித்தால் மட்டுமே பரிசுப் பொருள் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி கிரிடிட் கார்ட் தகவல்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம்  திருடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .
 
கிரெடிட் கார்டு தகவல்களை திருடிய உடன் அவற்றிலுள்ள பணத்தை திருடி வங்கி கணக்கு ஏதாவது ஒன்றில் பணம் பரிமாற்றம் செய்தாலோ அல்லது கூகுள் பே, போன்பே போன்ற செயலிகள் மூலம் பணத்தை எடுக்க முயற்சித்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக, நூதன முறையைக் கையாண்டு,க்ரெடிட் கார்டு தகவல்களை திருடி பணத்தைக் கொள்ளையடித்ததை போலிசார்வ்கண்டுபிடித்தனர்.
 
குறிப்பாக கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்டு அதன் மூலம் எடுக்கப்பட்ட பணம் அனைத்தும் டெல்லி மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்த பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதை வைத்து டெல்லி மின்சார வாரியத்தில் இருந்து விசாரணையை ஆரம்பித்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது அதன் மூலமாகத்தான் இந்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
பிடிப்பட்டவர்களிடம் விசாரணை செய்ததில் டெல்லியில் உள்ள மக்கள் மின் கட்டணத்தை மின்வாரியத்தில் செலுத்துவதற்கு பல்வேறு ஏஜென்சிகள் செயல்படுவதாக அறிந்து கொண்டு , அதை பயன்படுத்தி திருடப்பட்ட க்ரெடிட் கார்டுகளில் உள்ள பணத்தை மின் கட்டணம் செலுத்தி கொள்ளை அடித்ததாக தெரிவித்துள்ளனர். பொதுவாக டெல்லி மக்கள் இந்த ஏஜென்சிகளை தொடர்பு கொண்டு மின் கட்டணம் செலுத்துவதற்கான தகவல்களையும் பணத்தையும் அனுப்புவர்.  அந்த ஏஜென்சியில் உள்ள நபர்களோடு  கொள்ளை கும்பல் தொடர்பு வைத்துக் கொண்டு, தாங்கள் திருடிய கிரெடிட் கார்டு தகவல்களை வைத்து, டெல்லி மக்களின் மின் கட்டணத்தை மின்வாரியத்தில் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கு கொடுத்து திருடப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்திய பணத்தை ரொக்கமாக,அந்த ஏஜென்சிகளிடம் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளனர். இதுபோன்று மின் கட்டணம் மட்டும் அல்லாமல் டிடிஎச் ரீசார்ஜ் செய்தல் மற்றும் செல்போன் ரீசார்ஜ் செய்தல் போன்றவைகளுக்காகவும் திருடிய கிரெடிட் கார்ட்  தகவல்களை வைத்து பணம் செலுத்தியும் கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர்.
கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்திய பணத்தை ரீசார்ஜ் கடைகள் மூலமாகவும் பொதுமக்கள் மூலமாகவும் ரொக்கமாக வாங்கியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அப்துல் குமார் மற்றும் ஆனால் ஆகியோரிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இதுபோன்று பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மிகப் பெரிய போலிகால் செண்டர்   கும்பல் பின்னணியில் செயல்படுவதாகவும் அவர்களை பிடிக்கும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
 
மேலும் வங்கியில் இருந்து யாரேனும் பேசினாலோ, அல்லது பரிசுப் பொருட்கள் பரிசுத்தொகையை விழுந்துள்ளதாகவும் கிரெடிட் கார்டுகள் டெபிட் காடுகள் காலாவதியாக கூறி தகவல்களை கேட்டாள் அவர்களுக்கு வங்கி கணக்குகள் மற்றும் கிரெடிட்,டெபிட் கார்டுகள் தொடர்பான தகவல் அளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.