1 ரூபாய் சில்லறை கேட்ட அரசு பஸ் கண்டக்டருக்கு அடி, உதை : தலைக்கேறிய போதையால் செய்த அட்டூழியம்

பல்லடம் அருகே ஓடும் அரசு பேருந்தில் ரூ.1 சில்லறை கேட்ட நடத்துனருக்கு அடி உதை.

1 ரூபாய் சில்லறை கேட்ட அரசு பஸ் கண்டக்டருக்கு அடி, உதை : தலைக்கேறிய போதையால் செய்த அட்டூழியம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் இன்று மாலை P8 என்ற நகர பேருந்து ஒன்று மாலுமிச்சம்பட்டி நோக்கி சென்றுள்ளது. பேருந்தை பல்லடம் செம்மிபாளையத்தை சேர்ந்த ஓட்டுநர் கல்யாண சுந்தரம் 48 ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்தில் நடத்துனர் பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டியை சேர்ந்த அங்கமுத்து 46 மற்றும் 60 க்கும் மேற்பட்ட பயணிகளும் இருந்துள்ளனர்.

பேருந்து பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செட்டிபாளையம் சாலையில் ஐயம்பாளையம் அருகே ஆலமர ஷ்டாப்பை கடந்த பொழுது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து அந்த நகர பேருந்தில் ஏறி பயணித்த ஐயம்பாளையம் பகுதியில் உள்ள பிரபல பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரதீஸ் (20), ப்ரனேஷ்வரேன் (20), செல்வம் (20) ஆகியோர் மூன்று தொழிலாளர்களும் மது போதை தலைக்கேறிய நிலையில் நடத்துனர் அங்கமுத்துவிடம் மூன்று பேருக்கும் பயணசீட்டு  ரூ. 21 கொடுக்க வேண்டிய நிலையில் ரூ.50 ஆக குடுத்துள்ளனர்.

படியில் தொங்கிய நிலையில்  முகக்கவசம் அணியாமல் பயணித்த அவர்கள் மூவரும் ஆலமர  ஸ்ட்டாப்பில் வண்டியை நிறுத்துமாறு கூறி இறங்கியதோடு நடத்துனரிடம் சில்லறை பாக்கி கேட்க அதற்கு 30 ரூபாயை அவர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டு நடத்துனர் அங்கமுத்து  மீதி ஒரு ரூபாய் சில்லறை கேட்டுள்ளார்.

இதில் சில்லறையை தர மறுத்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடி போதை தொழிலாளர்கள் மூவரும், நடத்துனர் அங்கமுத்துவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனிடயே தப்பி ஓடிய தொழிலாளர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்து நிலைகுலைந்த அங்கமுத்துவை பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்பூலென்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்துனருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தாக்குதலுக்கு ஆளான நடத்துனர் அங்கமுத்து கூறுகையில், மது போதையில் முககவசம் அணியாமல் பேருந்தில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததோடு அல்லாமல் ஒரு ரூபாய் சில்லறை கேட்டு தர மறுத்து தன்னை தாக்கிய தொழிலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதனிடயே அரசு பேருந்தின் நடத்துனர் தன்னை தாக்கியதாக கூறி பல்லடம் அரசு மருத்துவ மனையில் ப்ரனேஷ் என்ற பனியன் தொழிலாளி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.