மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்... இந்த மூணு பேரில் யார் வேணும்? பேரம் பேசிய மேனேஜர்..! தட்டி தூக்கிய போலீசார்!!

மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த கடை உரிமையாளரை பிளான் போட்டு தூக்கிய போலீசார்...

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்... இந்த மூணு பேரில் யார் வேணும்? பேரம் பேசிய மேனேஜர்..! தட்டி தூக்கிய போலீசார்!!

இளைஞர்களை குறிவைத்தே மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளில் என அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அப்படித்தான் பெருந்துறையில் சிலர் கையும் களவுமாக சிக்கி உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தங்கும் விடுதி ஒன்றில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரை திருப்பூரை சேர்ந்த தானேஷ் குமார் என்பவர் நடத்தி வருகிறார். அதேசமயம் அந்த  சென்டரில் பல பெண்களை வைத்து விபச்சாரமும் செய்து வந்துள்ளார். இதனால் அங்கு பல இளைஞர்கள் பணத்தோடு அந்த மசாஜ் சென்டருக்கு திரண்டு சென்று கொண்டிருந்தனர். இதுபற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அந்த மசாஜ் சென்டரை மறைந்திருந்து கண்காணிக்க ஆரம்பித்தனர். அதற்காக ஒரு போலீசாரை மப்டி டிரஸ்ஸில், அந்த மசாஜ் சென்டருக்குள் அனுப்பி வைத்தனர்.

அப்போது அங்கு வந்திருப்பது காவலர் என்பதை அறியாத தானேஷ் குமார், கஸ்டமர் தான் வந்திருக்கிறார் என்று நினைத்து கொண்டு, மசாஜ் செய்து கொள்வதற்கான கட்டணங்களை கடகடகவென சொல்ல ஆரம்பித்துள்ளார். அதாவது நீங்கள் மசாஜ் செய்து கொள்ள விரும்பினால் 2 ஆயிரம் ரூபாய், அதுவே மசாஜ் அழகியுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டுமென்றால் தனியாக  2 ஆயிரம் ரூபாய் என்றும் பேரம் பேசியுள்ளார். அத்துடன் இல்லாமல் அங்கிருந்த 3 இளம்பெண்களையும் அவர் முன்பு வரிசையாக நிறுத்திவிட்டு, இவர்களில் யார் வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்றார். இதன்மூலம் அதிர்ச்சியான போலீசாருக்கு, அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து தானேஷ்குமார் சொன்ன கட்டணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டு, அங்கிருந்த 3 பெண்களில் ஒரு பெண்ணை அழைத்து கொள்வதாகவும் சொன்ன காவலர், பிறகு, ஏடிஎம்மில் பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு, வெளியே வந்து இது குறித்து தகவலை துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார். பின்னர், அந்த மசாஜ் சென்டருக்கு வெளியே தயார் நிலையில் மறைந்திருந்த, தனிப்படை போலீசார் மசாஜ் சென்டருக்குள் புகுந்து மேனேஜர் தினேஷ்குமாரை அலேக்காக தூக்கி சென்றனர்.

அதன்பின்பு மசாஜ் சென்டரில் உல்லாசத்திற்காக பயன்படுத்தி வந்த அந்த 3 பெண்களையும் மீட்டு மாவட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் இந்த மசாஜ் சென்டர் இயங்குவதற்கு காரணமே இளைஞர்களை குறி வைத்துதானாம். அங்கிருக்கும் காலேஜ், தொழிற்சாலையில் பணிபுரியும் இளைஞர்களை டார்கெட் செய்தே பெருந்துறையில் மசாஜ் சென்டர் துவங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதெல்லாம் கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெருந்துறை போலீசார் கைது செய்த தினேஷ்குமாரை சிறையில் அடைத்தனர்.