உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்தவர் கைது!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்தவர் கைது!!

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் ஐ விமர்சித்தும், யூடியூபில் அவதூறாக பேசியதற்காகவும் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் பிரபல யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடந்த விவாத  நிகழ்ச்சியில் "மணிப்பூரில் கலவரம்  நடக்கத் தான் செய்யும் தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும்.? அவரிடம் துப்பாக்கியை கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து விமர்சித்து அவதூறாக பத்ரி சேஷாத்ரி பேசியது சர்ச்சையானது.

இதையும் படிக்க || 7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-56!!

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட காடூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு குன்னம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை பத்ரி சேஷாத்திரியை சென்னையில்  அவரது இல்லத்தில் கைது செய்து, IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து அதிகாலை  கைதான பதிப்பாளர் பத்ரி ஷேசாத்திரியை, பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போது, அங்கு சூழ்ந்த பாஜகவினர் அவரது கைதை கண்டித்து கண்டன முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து  பத்ரி சேஷாத்ரியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலிற்கு அனுப்பி வைத்தனர்

இதையும் படிக்க || RTE மாணவர்களுக்கு சீருடை வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை!!