கொலைகாரனாக்கிய காதல்; பெங்களூரில் நடந்த கொடூரம்:

காதலிக்காக மூன்று பேரைக் கொலை செய்து உடல் பாகங்களை மறைத்து வைத்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

கொலைகாரனாக்கிய காதல்; பெங்களூரில் நடந்த கொடூரம்:

கர்நாடகாவையே உலுக்கிய தொடர் கொலை சம்பவத்தின் முடிவு வந்தது. காதலிக்காக பழி வாங்கும் நோக்கத்தில், ஐந்து பெண்களை துண்டு துண்டாக வெட்டி, தொடர் கொலை செய்து வந்த நபர், போலீசில் பிடிப்பட்டதை அடுத்து, இச்சம்பவம், அப்பகுதியை உலுக்கியுள்ளது.

காதலர்கள் கைது:

ஸ்ரீரங்கப்படிணம் துணைப் பிரிவைச் சேர்ந்த சிறப்புத் தனிப்படை வைத்து குற்றவாளியைப் பிடித்த நிலையில், அவர், ராமநகராவின் குடூர் பகுதியைச் சேர்ந்த டி. சித்தலிங்கப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், அவரது காதலியாக அறியப்பட்ட சந்திரக்கலா என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல கொலைகளுக்குத் திட்டம்:

போலீசில் பிடிப்பட்ட பின்னும், மேலும் ஐந்து பெண்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் கொலை வழக்கு, பல நாட்களாக நடந்திருந்தாலும், போலீசார் கண்பார்வைக்கு எட்டியது ஜூன் மாதம் 7ம் தேதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு சடலங்கள்:

கடந்த ஜூன் 7ம் தேதி, இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் பாதியாக மீட்கப்பட்டிருக்கின்றன. மாண்டியா பகுதியில் இரண்டு உடல்கள் நதிக்கரைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. கே பெட்டனஹல்லிக்கு அருகிலுள்ள, பேபி ஏரியில் ஒரு சடலமும், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரகெரே கிராமட்தில் உள்ள இ.டி.எஸ் வாய்க்காலில் மற்றொரு சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இணைக்கப்பட்ட வழக்கு:

இரண்டு சடலங்களும் இவ்வளவு தூர இடைவேளியில் கண்டெடுக்கப்பட்டாலும், இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு, மீட்கப்பட்ட சடலங்கள், இரண்டும் பாதியாகவே கிடைத்துள்ளன. முதல் பாதி கிடைக்கவில்லை.

தொடங்கிய பரபரப்பு விசாரணை:

இரண்டு சடலங்கள் கிடைத்தாலும், இரண்டு கொலைகளும் ஒன்று போல இருந்தாலும், சரியான தடையங்கள் இன்றி காவல் துறையினர் தவித்துள்ளனர். அதனால், முதலில் சடலங்களை அடையாளம் காண முடிவெடுத்து, 45 அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் உருவாக்கப்பட்டு விசாரணைத் துவங்கியது. சுமார் 25 இல் இருந்து 35 வயதுக்கு உட்பட்ட காணாமல் போன பெண்கள் குறித்து தகவல்கள் திரட்டத் துவங்கியுள்ளனர். ஏன் என்றால், கிடைத்த சடலங்கள் அந்த வயது வரம்பில் தான் கிடைத்துள்ளன.

இவர்தான் அவர்:

சுமார் 10,000 நோட்டீசுகள் பகிரப்பட்டு, அருகாமையில் இருந்து அனைத்து பகுதிகளிலும் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்த போது, கிட்டத்தட்ட 1,116 காணாமல் போன பெண்களின் வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்தது. சுமார் இரண்டு மாதங்கள் கடுமையாக தேடிய பின், இரண்டு வழக்குகள், கிடைத்த சடலங்களின் விவரங்களோடு இணைந்தது. பின், அவர்களது வீடுகளுக்கு சென்று போலீசார் விசாரித்ததை அடுத்து, அவர்களது புகைப்படங்களும் கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளது.

பிடிபட்டார் குற்றவாளி:

பின், அவர்களது மொபைல்களின் சேவை இருப்பிடங்களைக் கண்காணித்ததன் மூலம், மைசூரில் இருந்து மாண்டியாவிற்கு பயணித்தது தெரியவந்துள்ளது. பின், சந்தேகத்திற்குற்ய தொடர்புகளை ஆராய்ந்ததன் மூலம், 35 வயதான சங்கரலிங்கப்பா பிடிப்பட்டார். பெங்களுரில் உள்ள அவர்து வீட்டில் வைத்து போலீசார் அவரைக் கைது செய்த போது, சங்கரலிங்கப்பா, சந்திரகலாவையே கொலை செய்ய திட்டமிட்டுக் கொண்டிருந்ததாக மூத்த அதிகாரி பிரவீன் மதுகர் பவர் தெரிவித்தார்.

Karnataka to reserve 2% seats for state sportspersons in police recruitment  - Education Today News

இரண்டல்ல, ஐந்து:

இந்த இரண்டு கொலைகளைக் குறித்து, தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சங்கரலிங்கப்பா, மேலும் பல கொலைகளை செய்ததை ஒப்புக் கொண்டார். தனது காதலியான சந்திரகலாவை வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 12 பேரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதில் ஐவர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தது பெரும் அதிர்ச்சி அளித்தது. இரண்டு கொலைகளைத் தேடி போனால், தொடர் கொலைப் பற்றிய தகவல் வெளிச்சத்துக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சடலங்களின் அடையாளம்:

இறந்தவர்கள், சித்தம்மா, பார்வதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 5, இவர்கள் இருவரையும் மைசூரு, மெட்டங்கள்ளி பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு அழைத்துள்ளார். வந்தவர்களை மூச்சடைத்து கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தூக்கி எரிந்துள்ளார் சங்கரலிங்கப்பா. மேலும், அவர்களது ஆபரணங்களை திருடி, மற்றொரு வீடில் புதைத்து வைத்திருக்கின்றனர் இந்த ஜோடி.

மிகப்பெரும் சவால்:

இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கிலீடுபட்ட அதிகாரிகள், துணை கண்காணிப்பாளர் சந்தேஷ் குமார், கண்காணிப்பாளர் என் யதீஷ் மற்றும் உதவி கண்காணிப்பாளர் வேணுகோபாலுக்கு, மைசூரு தெற்கு பகுதிக்கான ஐ.ஜி பிரவீன் மதுகர் பவர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். கன்னட தேசத்தையே அதிர வைத்த இந்த சம்பவம் இன்னும் முடியவில்லை என்றும், தற்போதைய மிகப்பெரும் சவால், மற்ர பெண்களின் உடல்களை மீட்பது தான் என்றும் அதிகாரி பவர் தெரிவித்தார்.