மனைவி, மகன்களை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை....கடன் சுமையால் கொலையா?....போலீசார் விசாரணை..!

சென்னை பெருங்குடி பகுதியில் மனைவி, மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு, வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, மகன்களை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை....கடன் சுமையால் கொலையா?....போலீசார் விசாரணை..!

சென்னை பெருங்குடியில் உள்ள பெரியார் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பார்க்லேஸ் என்கிற தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவர் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக,அந்தபகுதியை சேர்ந்த பொதுமக்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் மணிகண்டன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.  பார்க்லேஸ் என்ற வங்கியில் பணிபுரிந்து வந்த மணிகண்டன், இரண்டு மாதம் வேலைக்குச் செல்லவில்லை எனவும் . முன்னதாக ராயல் பேங்க் மற்றும் வேர்ல்ட் பேங்க் உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளில் முக்கிய பொறுப்பு வகித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. 

அவரது மனைவி தரங்க பிரியா ராயல் பேங்க் என்ற தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்ததும் தற்போது இரண்டு குழந்தைகள் இருப்பதால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் கடன் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மணிகண்டனை தேடி வந்த நபர்கள் கடனை வசூலிக்க வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மணிகண்டன் கடன் வாங்கி இருப்பதும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கடன் சுமை காரணமாக மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டு கிரிக்கெட் மட்டையால் மனைவியை கொலை செய்து இருக்கலாம் என்றும்

அதன் பிறகு தாய் தந்தை இல்லாமல் குழந்தைகள் இருக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.  மேலும் மணிகண்டனின் செல்போன் ஆய்வு செய்தபோது ஆன்லைன் கேம்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதனால் ஆன்லைன் கேமில் பணத்தை இழந்து கடன் சுமை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.