தொழிலதிபர்களிடம் ஆன்லைனில் பொருட்களை வாங்கி மோசடி ...

தொழிலதிபர்களிடம் ஆன்லைன் மூலம் விளை பொருட்களை வாங்கி மோசடி செய்த நபர் கைது.

தொழிலதிபர்களிடம் ஆன்லைனில் பொருட்களை வாங்கி மோசடி ...

கோவையை சேர்ந்தவர் மோகன சிவலிங்கம். இவரிடமிருந்து பல்லடம் காரணம்பேட்டை பகுதியில் ஆன்லைன் டிரேடிங் நடத்திவந்த கோவை உக்கடத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் அருள் என்பவர் 10 லட்சம் மதிப்பில் 50 டன் நெல் மூட்டைகளை நடந்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது. அதற்குரிய பணத்தை தராமல் அருள் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகன சிவலிங்கம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள அவர்களின் குடோனுக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அருள் குடோனை காலி செய்துவிட்டு, நெல் மூட்டைகளுடன் தப்பி ஓடி தலைமறைவானது தெரிய வந்தது.

இதனையடுத்து நெல் மூட்டைகளை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை வாங்காத மோகன சிவலிங்கம் பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து விசாரணையை தொடங்கிய குற்றப்பிரிவு ஆய்வாளர் கவிதா தலைமையிலான மதி, வேல்முருகன், திலக் ஆகியோர் கொண்ட குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து ஆன்லைன் டிரேடிங் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கோவை உக்கடம் சுமை தூக்குவோர் சங்க செயலாளராக இருந்து வரும் அருளை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆன்லைன் டிரேடிங் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்று வடமாநில விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்களிடம்  ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் நெல், சுண்டல், மிளகு, சுக்கு உள்ளிட்ட பல்வேறு விலை பொருட்களை விவசாயிகள் பலரிடமிருந்தும் வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தை தராமல் மோசடி செய்து வந்ததும் தற்போது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. புத்தாண்டு தினமான இன்று பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 10 லட்சம் மதிப்பிலான நெல் மூட்டைகளை பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக கோவை உக்கடம் சுமை தூக்குவோர் நலச்சங்கத்தின் செயலாளராக இருந்து வரும் அருள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.