நெல்லை சம்பவம்: "வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல், உரிய நடவடிக்கை வேண்டும்" எடப்பாடி பழனிச்சாமி!

நெல்லை சம்பவம்: "வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல், உரிய நடவடிக்கை வேண்டும்" எடப்பாடி பழனிச்சாமி!

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஜாதிய தீண்டாமை, வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுவதாக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை, 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கிய சம்பவத்திற்கு, எடப்பாடி பழனி சாமி தனது எக்ஸ் தளத்தில் கடும் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது , இக்கொடுர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், " இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது" எனக் குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும், "இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல் , காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.