டிக்கெட் எடுக்க சொன்னது குத்தமா?.. கண்டக்டரை தாக்கி பஸ்சில் இருந்து தள்ளி விட்டு வடமாநிலத்தவர்கள் அட்டூழியம்!!

அரசு பேருந்தில் கண்டக்டரை வடமாநிலத்தவர் 6 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் எடுக்க சொன்னது குத்தமா?.. கண்டக்டரை தாக்கி பஸ்சில் இருந்து தள்ளி விட்டு வடமாநிலத்தவர்கள் அட்டூழியம்!!

நேற்று காலை பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் வரை செல்லும் நகரப்பேருந்து ஒன்று பெரம்பலூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து புறப்பட்டது. அந்த பேருந்தை இயக்கிய டிரைவர் பெயர் பாலகிருஷ்ணன், கண்டக்டர் பெயர் ஆறுமுகம்(50).

இந்நிலையில், மாலை பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சிறுவாச்சூர் கிராமத்தை வந்தடைந்ததும் 6 வடமாநிலத்தவர்கள் எறியுள்ளனர். அதில், மூன்று பேர் முன்புறமும், 3 பேர் பின்புறமும் ஏறியுள்ளனர். அப்போது கண்டக்டர் டிக்கெட் எடுக்கும் படி பின்னால் ஏறிய மூன்று பேரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் முன்னாள் ஏறியிருப்பவர்கள் டிக்கெட் எடுத்து விட்டனர் என்றனர்.. முன்பக்கம் ஏறியுள்ளனர் கேட்டால் பின்புறம் உள்ளவர்கள் எடுத்து விட்டனர் என கூறி வந்ததால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நடந்து வந்த நிலையில், அவர்கள் இறங்கும் இடமான விஜயகோபாலபுரம் வந்துவிட்டது. கடைசிவரை அவர்கள் டிக்கெட் எடுக்காமல் இறங்க முயன்றுள்ளனர். ஆனால், கண்டக்டர் அவர்கள் இறங்க விடமால், அவர்களை டிக்கெட் எடுக்கும் படி கூறியுள்ளார்.


இதனால், ஆத்திரம் அடைந்த 6 பெரும், கண்டக்டரை தாக்கி பஸ்சில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த 6 வடமாநிலத்தவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

காயமடைந்த கண்டக்டரை பயணிகளும், டிரைவரும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கபட்டுள்ளது. போலீசார் விசாரணையில், அந்த 6 பெரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், விஜயகோபாலபுரம் பகுதியில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர்கள் எனவும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து, அந்த 6 பேரில் ஒருவரான அபிநந்தன் குமார்தாஸ் என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பித்து சென்ற 5 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.