தடுமாறி விழுந்த காவலர்! இரண்டு பாகங்களாக மீட்ட கொடூரம்!

சென்னையில் இருந்து ஊருக்கு செல்லும் வழியில் ரயில் ஏறி காவலர் உடல் இரண்டாக சிதறியது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால், அப்பகுதியில் சோகம் நிலவியுள்ளது.

தடுமாறி விழுந்த காவலர்! இரண்டு பாகங்களாக மீட்ட கொடூரம்!

ரயில் நிலையத்தில் நிலை தடுமாறி விழுந்த காவலர் மீது ரயில் ஏறியதால் மரணம் அடைந்தார். இரண்டு துண்டுகளாக சிதறிய சடலத்தை மீட்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே  ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலு(36). இவர் 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆயுதப்படை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

சென்னையில் இருந்து ஊருக்கு, கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மொரப்பூர் ரயில் நிலையத்தில் இறங்குவதற்காக ரயிலில் இருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி விழுந்ததால் காவலர் வேலு மீது, ரயில் சக்கரம் ஏறி உடல் இரண்டாக சிதறி உயிரிழந்தார்.

சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த சேலம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உடற்கூறு ஆய்விற்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, வேலுவின் உடலை அனுப்பி வைத்துள்ளனர்.

இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது இவரது குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் சோகம் நிலவி உள்ளது.