பால் டெலிவரி செய்ய சென்ற நபரை தாக்கி பணம் பறிப்பு...3 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை...

பால் டெலிவரி செய்ய சென்ற நபரை கத்தியால் வெட்டி பண மற்றும் செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பால் டெலிவரி செய்ய சென்ற நபரை தாக்கி பணம் பறிப்பு...3 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை...

சென்னை வேளச்சேரி விஜயா நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி வயது 25 சொந்தமாக  மினி வேன் வைத்து பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்ய கொடுங்கையூர் எழில் நகர் வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது எழில் நகர் பகுதியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்திலேயே அமர்ந்திருந்தார்.

அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் மினி வேன் கண்ணாடிகளை உடைத்து உள்ளே அமர்ந்திருந்த பாலாஜியை சரமாரியாக வெட்டினர் இதில் பாலாஜிக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது மேலும் பாலாஜி வைத்திருந்த 35,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்றனர்.

பாலாஜி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை பார்த்து உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

இதில் சம்பவத்தில் ஈடுபட்டது ஏற்கனவே சில குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று மாலை கொடுங்கையூர் குப்பை மேடு அருகே பதுங்கியிருந்த கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா  (வயது 22), அதே பகுதியைச் சேர்ந்த  ஜெயராம் (வயது 19) புதிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்கின்ற துப்பாக்கி (வயது 20) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.