நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் வாக்குமூலம்; சீமான் கைது செய்யப்படுவாரா?

நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் வாக்குமூலம்;  சீமான் கைது செய்யப்படுவாரா?

திருவள்ளூர் மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி ஆஜராகி சுமார் 2 மணி நேரம் நீதிபதி முன் வாக்குமூலம் அளித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலக்ஷ்மி கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மோசடி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. 

கடந்த 11 வருடங்களாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரித்து சீமானை சிறையில் அடைக்க வேண்டும் என தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் நிறுவனர் வீரலட்சுமி உடன் வந்து சென்னை காவல் ஆணையர் இடத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் மனுவை அளித்தார், 

இந்த நிலையில் அடுத்த நாளே வீரலட்சுமி நடிகை விஜயலட்சுமி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி மீண்டும் வழக்கு தொடர்பாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  விஜயலட்சுமி விசாரணைக்காக நேற்று ராமாபுரம் காவல்நிலையத்தில் 6 மணியளவில் ஆஜரானார். 

இதனையடுத்து கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் அவர்களால் இரவு 11 மணி வரை காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய நிலையில்,  போலீஸ் பாதுகாப்போடு வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மீண்டும் நள்ளிரவு 2 மணி வரை வீட்டில் வைத்து விசாரணை நடைப்பெற்றுள்ளது.

 மேலும் இன்று திருவள்ளூர் கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி பவித்ரா முன்னிலையில் நடிகை விஜயலக்ஷ்மி வாக்குமூலம் அளிப்பதற்காக சென்னையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  சுமார் 1.45 மணி அளவில் நடிகை விஜயலட்சுமி காரில் அழைத்து வரப்பட்டு கூடுதல் மகிலா நீதிமன்றம் நீதிபதி பவித்ரா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார்

பின்னர் சுமார் 2.30 மணி நேரம் நடிகை விஜயலட்சுமி இடம் நீதிபதி பவித்ரா வாக்குமூலம் பெற்றதை தொடர்ந்து சுமார் 8 பக்க வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் இதில் வங்கி பரிவர்த்தனை, இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ, இருவருக்கும் இடையேயான உறவு, திருமணம் தகராறு உள்ளிட்ட தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை விஜயலட்சுமி எப்போது ஆஜராக வேண்டும் என்பது குறித்து பின்னர் தேதி அறிவிக்கப்படும் என விசாரணை முடிவற்றது.

இதனை அடுத்து விசாரணை முடிவடைந்து நடிகை விஜயலட்சுமி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனது காரில் புறப்பட்டு சென்றார். மேலும் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் படிக்க: கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை ஏலம் விடும் பணி தொடக்கம்!