”புதிதாக களம் இறங்கிய Furniture கும்பல்” முன்னாள் டிஜிபி ரவி பெயரில் போலி முகநூல் கணக்கு...!

”புதிதாக களம் இறங்கிய Furniture கும்பல்” முன்னாள் டிஜிபி ரவி பெயரில் போலி முகநூல் கணக்கு...!

தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி ரவி பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கப்பட்டதை அடுத்து, சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். 

தமிழக முன்னாள் டிஜிபியும், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் முதல் காவல் ஆணையருமான ரவி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், உடற்பயிற்சி தொடர்பாகவும், இளைஞர்களை உத்வேகப்படுத்தும் விதமாகவும் நல்ல பதிவுகளை பதிவிட்டு வருபவர். இதனால் இவரின் முகநூல் பக்கத்தை ஏராளமான இளைஞர்களும், அதிகாரிகளும் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க : கனவுகளை சுமந்து... நிலவை நோக்கி பறக்க...சந்திரயான் 3 ரெடி!

இந்த நிலையில், ரவியின் புகைப்படத்தை வைத்து அவரது பெயரிலே போலியான பேஸ்புக் அக்கவுண்டை மோசடி கும்பல் தொடங்கி உள்ளது. மேலும் அந்த அக்கவுண்டில் இருந்து, தெரிந்த நண்பர் ஒருவரிடம் இருந்து பர்னிச்சர் பொருட்களை வாங்கி உள்ளதாகவும், அதனை வாங்குமாறு பரிந்துரை செய்தும் மெசேஜ் அனுப்பி தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த முன்னால் டிஜிபி ரவி, உடனடியாக இது குறித்து சைபர் கிரைமில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்பு எல்லாம், கார்டு மேல இருக்க அந்த 16 நம்பர் சொல்லு சார்; Do you have G Pay? என்ற மோசடி கும்பலை தொடர்ந்து தற்போது Furniture கும்பல் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.