பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த வழக்கு- கணவர் குற்றவாளி என அறிவிப்பு

கேரள மாநிலத்தில் பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த வழக்கில் கணவர் சூரஜ் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 25 வயதான உத்ரா பாம்பு கடித்து உயிரிழந்தார். வரதட்சனைக்காக உத்ராவை அவரது கணவர் சூரஜ் பாம்பை ஏவி கொலை செய்ததது விசாரணையில் தெரிய வந்தது. இரண்டு முறை இதேபோன்று கொலை செய்ய முயன்றும், அதில் இருந்து உத்ரா தப்பித்த நிலையில், மூன்றாவது முறையாக பாம்பு கடித்ததில் அவர் பலியானது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சூரஜ் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து தண்டனை குறித்த விவரங்கள் வரும் 13 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.