விவசாயி தற்கொலைக்கு இரு போலீஸ் மீது வழக்கு பதிவு!!!

மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒருவரின் மரணத்திற்கு காரணம் என இரு காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயி தற்கொலைக்கு இரு போலீஸ் மீது வழக்கு பதிவு!!!
சித்தரிக்கப்பட்டது

உத்திர பிரதேச் அமாநிலத்தைச் சேர்ந்த வ்சிவசாயி ஒருவர், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதன் இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரது இறப்பு சம்மந்தப்பட்டவர்கள் என இரண்டு காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்லது அப்பக்டுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2020ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29ம் தேதி, லலித்பூரில் உள்ள பஸ்தகுவா கிராமத்தைச் சேர்ந்த ராஜா சிங் என்பவரது உடல், அவரது கிராமத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் துர்கான்புரா கிராமத்தில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அது தற்கொலை என முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து, இறந்தவரின் மனைவி ஹிரேந்திர ராஜா என்ற அவரது மனைவி, தேசிய மனித உரிமையை உதவிக்காக நாடினார்.

அப்போது, கடந்த 2020, ஏப்ரல் 27ம் தேதியன்று தனது வீட்டில் இருந்து, இறந்த தனது கணவர் இரண்டு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின், இரண்டு நாட்கள் கழித்து (29 ஏஒரல்) சடலமாக பக்கத்து ஊரில் மீட்கப்பட்டதாகவும் கூறினார். அது மட்டுமின்றி, 2020 ஏப்ரல் 25ம் தேதியன்று, தனது கணவரை அந்த காவலர்கள் அடித்துத் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில், இறந்தவரின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்ட, இன்ஸ்பெக்டர் நிக்வேந்திர பிரதாப் என்பவர் மற்றும் ஹெட் கான்ஸ்டெபிள் நரேந்திர சிங் என்பவரை விசாரிக்கத் துவங்கினர். பஸ்தகுவா கிராமத்தின் காவல் நிலையத்தைச் சேர்ந்த அந்த காவலர்களை, சிபி சி.ஐ.டி நடத்திய விசாரணை மூலம் அந்த இரு காவலர்கள் மீது குற்ரம் நிரூபணம் ஆனது. இதனால், அவர்கள் மீது, சதர் கோட்வாலி காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 306இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.