2 மாதத்தில் ஜெயிலுக்கு போகிறார் சசிகலா.! கொடுத்த வாக்கை மீறியதால் மேலிடமிருந்து பறந்துவந்து உத்தரவு.! 

2 மாதத்தில் ஜெயிலுக்கு போகிறார் சசிகலா.! கொடுத்த வாக்கை மீறியதால் மேலிடமிருந்து பறந்துவந்து உத்தரவு.! 

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்கிரகார சிறையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த போது சசிகலாவும் இளவரசியும் சிறைக்கு வெளியே சென்று ஷாப்பிங் சென்ற வீடியோ  சமூகவலைத்தளங்களில் வெளிவந்தது. 

இது சர்ச்சையான நிலையில்,இதை விசாரித்த கர்நாடக சிறைத்துறை அதிகாரி ரூபா, கர்நாடக அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதாகவும், சிறையிலிருந்து வெளியே சென்று ஷாப்பிங் செல்ல அனுமதி தருவதாகவும் குற்றம் சாட்டினார். இதற்காக சிறை துறை உயர் அதிகாரியான DG சத்யநாராயண ராவ் சசிகளைவிடமிருந்து ரூபாய் 2 கோடி வாங்கியதாக தனது உயரதிகாரி மீதே குற்றம் சாட்டினார். 

இது பற்றிய விசாரணை நிலுவையில் இருந்தது. இது பற்றி கர்நாடக சிறைத்துறை நிர்வாகவும்,கர்நாடக அரசோ ரூபாவின் அறிக்கை மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதன்பின் பரப்பன அக்கிரகார சிறையிலிருந்து சசிகலா வெளிவந்து 3 மாதத்துக்கும் மேல் ஆகிறது. அந்த வழக்கும் அப்படியே மூடப்பட்டது. 

இந்நிலையில் சமீபத்தில் சமூக ஆர்வலர் கீதா சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதில்கொடுத்த கர்நாடக  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா காரணமாக இந்த வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தாமதமாகி உள்ளது என்றும், அதற்காக காலஅவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு சம்பந்தப்பட்ட இறுதி விசாரணை அறிக்கையை இன்னும் 2 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இறுதி தீர்ப்பு வரும் போது நிச்சயமாக சசிகலாவுக்கு சிறைத்தண்டனை கிடைக்கும். எனவே இரண்டு மாதத்தில் சசிகலா மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப் படுகிறது. 

ஏன் சசிகலா மீது இந்த வழக்கு வேகப்படுத்தப்படுகிறது என்று அரசியல் வட்டாரத்தில் கேட்கப்படும் போது, சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் போதே அவரிடம் இனி அரசியல் பற்றி பேசக்கூடாது என்றும், அரசியல் தொடர்பான அறிக்கைகள் வெளியிடக்கூடாது என்றுமே மேலிடத்திலில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சசிகலா அதை மீறி தன் பெயரில் ஆடியோக்களை வெளியிட்டுவருவதால் தான் மேலிடத்திலிருந்து இந்த பழைய வழக்குகளை தூசி தட்டுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.