முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை...எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை...எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினரை ஏவிவிட்டு திமுக அரசு மக்களை மடைமாற்றுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் எதிர்கட்சியினரின் குரல்களை நசுக்கும் முயற்சியில், திமுக அரசு ஈடுபட்டு வருவதாக சாடினார். மேலும் உறுதி அளித்தப்படி எந்த ஒரு திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என குறை கூறியுள்ள அவர், திமுக அமைச்சருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திசை திருப்பவே, எதிர்கட்சியினர் மீது  மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையை திமுக ஏவி விட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதனை சட்டரீதியாக எதிர்த்து போராடுவோம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

மேலும் படிக்க : ஒரு பக்கம் ரெய்டு...மறுபக்கம் ஆதரவாளர்கள் அதிரடி கைது...அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி டிவிட்டர் பதிவு

மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரையும்,கழக தொண்டர்களையும் சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் இவ்வாறு தனது டிவிட்டர் பதிவில் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.