பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர்… மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி, தனியாக அழைப்பதாக புகார்!!

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதால் அவர் அதிரடியாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர்… மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி, தனியாக அழைப்பதாக புகார்!!

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதால் அவர் அதிரடியாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திருச்சி புத்தூர் மிகவும் பிரபலமுடைய பிஷப் ஹீபர் கல்லூரி அமைந்துள்ளது. காலை மற்றும் மாலை என இரு வேளையும் கல்லூரி செயல்பட்டு வருவதால், இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் அத்துறையின் மாணவிகள் சிலர் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்த் துறை தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். அதில், வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

மேலும், வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால், தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப் படுத்துகிறார். அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர், துறைத்தலைவரை பார்க்க போகும்போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும் என வலியுறுத்துகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

புகாரின் அடிப்படையில், வக்கீல் ஜெயந்திராணி தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர். தற்போது மாணவிகளின் புகார் குறித்து போலீஸ் தரப்பிலும் விசாரணையை தொடங்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து அவர் தமிழ்த்துறை தலைவர் பதிவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.