ரூ. 3,700 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி...!

ரூ. 3,700 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி...!

தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலை, ரெயில்வே தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையம், சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிய பின்னர், விவேகானந்தர் இல்லம் சென்ற பிரதமர், அடுத்ததாக அரசு நிகழ்ச்சி நடக்கும் பல்லாவரம் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்.முருகன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.  

இதையும் படிக்க : ”தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை, சென்னையை மிகவும் நேசிக்கிறேன்” - பிரதமர் மோடி பேச்சு!

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலை, ரெயில்வே தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்படி, தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவையையும், ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையையும், தமிழகத்தில் நீளமான சாலை போக்குவரத்துக்கான மேம்பாலமான மதுரை - நத்தம் மேம்பாலத்தையும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து திறைந்து வைத்தார். அதேபோல், ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.