இனி திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் மிஸ் யூனிவெர்ஸ் ஆகலாமா?

பல வகையான கட்டுப்பாடுகள் கொண்ட அழகி போட்டிகளில் சமீப காலமாக தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, பிரபஞ்ச அழகி போட்டிக்கு, திருமணமானவர்களும், தாயார்களும் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இனி திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் மிஸ் யூனிவெர்ஸ் ஆகலாமா?

ஒரு முறை, பாண்டிய அரசர் ஒருவர், நக்கீரரிடம், பெண்கள் கூந்தல் மணமானதா, அல்லது, பெண்களின் கூந்தலுக்கு மணம் சேர்ப்பது மணமான பூக்களா என கேள்வி எழுப்பினார் என திருவிளையாடல் கதைகள் கூறுகின்றன. அதற்கு நக்கீரரே சற்று தயங்கினார் என்றால் பாருங்கள்! ஏன் என்றால், அழகு என்பது பெண்மைக்கு இலக்கணமே ஆகிவிட்டது என பல புலவர்கள் கூறுவர். அப்படி பட்ட அழகிகளில் சிறந்த அழகி என்பது உடலை வைத்து மட்டுமல்ல, அவர்களது திறன், பண்பு, அறிவு என அனைத்தையும் அடிப்படையாக வைத்து தான் தேர்ந்தெடுக்க முடியும்! அப்படிப்பட்ட போட்டிகள் தான் தற்போது நடக்கும், உலக மற்றும் பிரபஞ்ச அழகிகளுக்கான போட்டி.

மிஸ் யுனிவர்ஸ்:

1854 ஆம் ஆண்டில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நவீன அமெரிக்க போட்டியுடன் தொடங்கி, இன்று வரை அழகுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் மிஸ் யுனிவர்ஸ் அதாவது பிரபஞ்ச அழகிக்கான தலைப்புக்கான போட்டி என்பது அமெரிக்காவை தளமாகக் கொண்ட மிஸ் யுனிவர்ஸ் அமைப்பால் நடத்தப்படும் வருடாந்திர சர்வதேச அழகுப் போட்டியாகும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு இந்த போட்டி நடைபெறாத காரணத்தால், வரும் 2023ம் ஆண்டு, 72 வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணியமாக்கப்படுகிறது:

190க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்ட, உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் போட்டிகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையாகாது. மிஸ் வேர்ல்ட், மிஸ் இன்டர்நேஷனல் மற்றும் மிஸ் எர்த் ஆகியவற்றுடன், மிஸ் யுனிவர்ஸும் மிகப்பெரிய நான்கு சர்வதேச அழகுப் போட்டிகளில் ஒன்றாகும். உலகில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான மிஸ் யுனிவர்ஸ், பெண்ணிய இயக்கத்தின் ஒரு பகுதியாக தற்போது மாறிவிட்டது. அத்துடன் இப்போட்டிகள் பெண்கள் நம்பிக்கையுடனும், அழகாகவும், வலிமையுடனும் இருக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், பலர் இது போன்ற போட்டிகள், Beauty Standards அதாவது, அழகு என்பதற்கான அர்த்தத்தை விவரிக்கும் விதமாக இருக்கிறது என்றும், இந்த போட்டிகள், காஸ்மெடிக்குகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் மட்டுமே உருவாக்கப்பட்டதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

12 Indians Who Won Big Beauty Pageants

அழகுக்கும் விதிமுறைகள்:

அப்போது இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்லலாமே! நானும் கலந்து கொண்டு வெற்றி பெற முடியுமா? என்றால், அது தான் இல்லை. ஏன் என்றால், இந்த போட்டியில் கலந்து கொள்ள பல விதிமுறைகள் உள்ளன.

இந்த போட்டியில் கலந்து கொள்ள நினைப்பவர்கள்,

  • குறைந்தபட்சம் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

  • குறைந்தது 5.7 அடி உயரமானவர்களாக இருக்க வேண்டும்.

  • அதிகபட்சம் 70 கிலோ எடை உடையவர்களாக இருக்க வேண்டும்.

  • பிரதிநிதிகள் திருமணமாகியோ அல்லது கர்ப்பமாகவோ இருக்கக்கூடாது.

  • அவர்கள் திருமணமாகாமல், திருமணத்தை ரத்து செய்யாமல், குழந்தை பிறக்காமல் இருந்தால் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

  • அது மட்டுமல்ல, ஒரு போட்டியாளர், ஒரு முறை மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க முடியும்.

  • மேலும், உணவு, உடை என பல வகையான விதிமுறைகள் இந்த போட்டிக்கு உள்ளது.

குறிப்பாக, போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஓராண்டு காலம் ஒப்பந்தம் போடப்படும். அதன் படி, ஒப்பந்தம் முடியும் வரை, அவர்களது உடல் குறித்து எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும், அழகி போட்டி அமைப்பு அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் படிக்க | காதல் உறவில் இருக்க கூடாது... மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு இவ்வளவு கண்டிஷனா.?!

The Unpleasant Reality Of Beauty Pageants That Must Change

அப்போது மற்றவர்கள் அழகில்லையா?

இந்த விதிமுறைகள், பிரபஞ்ச அழகி போட்டிக்கானது மட்டுமல்ல. அனைத்து வகையான அழகி போட்டிகளையும் செரும். முதலில் மாநில அளவு, பின், தேசிய அளவு, அதற்கு பிறகு தான், நாட்டின் பிரதிநிதியாக சர்வதேச அளவுக்கான போட்டிகளில் பங்குபெற முடியும். இப்படி இருந்தால், பின் அது எப்படி மற்ற பெண்களை பிரதிபலிக்கும்? இல்லையென்றால், மற்ற பெண்கள் எல்லாம் அழகு என்ற பட்டியலிலேயே இடம் பெற மாட்டார்களா? அல்லது, திருமணமானால், ஒரு பெண் அழகு போய் விடுமா? குழந்தை பெற்று விட்டால் அவள் அழகி இல்லையா? என்றெல்லாம் எதிர்ப்புகள் வரத் துவங்கின. குறிப்பாக, தற்போது சோசியல் மீடியா ஆதிக்கம் செலுத்தும் நமது வாழ்க்கையில், மக்களுக்கு புரிதல் அதிகரித்து வருவதால், பலரும் இது போன்ற போட்டிகள் குறித்து கேள்வி எழுப்ப துவங்கினர்.

இதனால், திருமணமானவர்களுக்காகவும், குழந்தை பெற்றவர்களுக்காகவும், மிஸஸ் யுனிவெர்ஸ் போன்ற போட்டிகள் வந்தன. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால், பல வெளிநாடுகளில், திருமணமாகாமலே, குழந்தை பெற்றவர்களும், திருமணமாகி, பிரிந்தவர்களும் இருப்பதால், அவர்கள் மிஸஸ் கணக்கில் வர மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றங்கள் வர்வேற்பு:

ஆனால், சமீப காலங்களில், ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு வந்தன. அழகி போட்டிகளில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், 5.5 அடி வரை கூட ஊயரமாக இருந்தால் ஒப்புக்கொள்ள படும் என கூறப்பட்டது. இது பலராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. மேலும், பல வகையான விதிமுறைகள் குறைக்கப்பட்டு, பல கோடி மக்கள் ஆதரவு பெற்றது. இதனையடுத்து தற்போது, மேலும் இரண்டு தளர்வுகள் வழங்கப்பட்டு,பலரது ஆதரவையும், வாழ்த்துகளையும் குவித்து வருகிறது.

வருமாண்டு, (2023) பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள், திருமணமானவர்களும், கர்ப்பமாகி, குழந்தை பெற்றவர்களும், கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

ஒரு உள் குறிப்பின்படி, "பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முகமை வைத்திருக்க வேண்டும் என்றும் ஒரு மனிதனின் தனிப்பட்ட முடிவுகள் அவர்களின் வெற்றிக்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றும் நாங்கள் அனைவரும் நம்புகிறோம்" என்று போட்டி நடத்தும் குழு குறிப்பிட்டது. இந்த அறிவிப்பை பலரும் ஏகபோகமாக வரவேற்றனர். மேலும் இதற்கு 2020 பிரபஞ்ச அழகியான ஆண்ட்ரியா மெர்சா, கரகோஷத்துடன் வரவேற்றார்.

Who is Miss Universe 2020 winner Andrea Meza? - Lifestyle News

‘எதிர்ப்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் தான்’- முன்னாள் பிரபஞ்ச அழகி

இது குறித்து பேசிய அவர், “இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். முன்பெல்லாம், ஆண்களால் மட்டுமே முடியும் எனக் கூறப்பட்ட தகுதிளுக்கு, பெண்கள் முன்னேறி, தலைமை தாங்குவது போல, சமூகம் மாறி வருவது போல, சமூகமும் மாறவேண்டும். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஏன் என்றால், அவர்கள், அழகான தனிமையில் இருக்கும் பெண்களை மட்டுமே, தனக்கு காதலியாக்க விரும்பும் ஆண்களாக தான் இருப்பார்கள். அவர்கள் எல்லாம், பெண்களை உடல் வைத்து எடை போடுபவர்கள். அதனால் தான் அவர்கள் எதிர்ப்பார்கள். ஆனால், இது வரவேற்கத்தக்க மாற்றம் தான்.” என்று தெரிவித்தார்.

பிரபஞ்ச அழகி போட்டி மட்டுமின்றி, மற்ற அழகி போட்டிகளிலும், உடல் எடை, உயரம், தோல் நிறம் ஆகியவை வைத்து பிரிக்காமல், அனைத்து வகையான பெண்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டால், மக்கள் பார்வை மாறும், அனைவரும் அழகுக்கான உண்மையான அர்த்தத்தையும் புரிந்து கொள்வர் என்பதில் எந்த ஐயமும் இல்லை!

--- பூஜா ராமகிருஷ்ணன்