பதவியேற்று 45 நாட்களில் பதவி விலகிய லிஸ் ட்ரஸ்!!! காரணம் என்ன?!!

பதவியேற்று 45 நாட்களில் பதவி விலகிய லிஸ் ட்ரஸ்!!! காரணம் என்ன?!!

இங்கிலாந்து மீண்டும் கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.  சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் லிஸ் ட்ரஸின் பதவி ஆபத்தில் இருந்த சூழலில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்:

இங்கிலாந்து பத்திரிக்கை தகவலின் படி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக கடந்த வாரத்தில் தகவல்கள் வெளியாகின.

100க்கும் மேற்பட்டவர்கள்...:

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், ஒரு மாதத்திற்குள் டிரஸ் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற சூழல் உருவானது.  தகவல்களின் படி, 100 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ட்ரஸ்ஸுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விரைவில் சமர்ப்பிக்க இருந்தனர்.

ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா?:

அதே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவர் கிரஹாம் பிராட்டி எம்பிகளின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்ததாக செய்திகள் கூறின. ட்ரஸ்ஸுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் ஜெரமி ஹன்ட் உடன் இணைந்து வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வர ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஏன் எதிர்ப்பு:

ட்ரஸ் அரசாங்கத்தின் இப்போது திரும்பப் பெறப்பட்ட வரிக் குறைப்புக் கொள்கை பிரதமரின் செல்வாக்கை மிகவும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.  இதன் காரணமாக கடந்த வாரத்தில் மட்டும் அவரது புகழ் 10 சதவீதம் குறைந்தது.

இப்போது 63 சதவீதத்துக்கும் மேலானோர் ட்ரஸ் பணியால் அதிருப்தி அடைந்திருந்த நிலையில்,  திருப்தி அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 சதவீதமாகவும் குறைந்தது.  இதன் முடிவில் அவரது புகழ் -47 வரை சென்றது.

ராஜினாமா:

பழமைவாத கட்சி சார்பில் போட்டியிட்டு சக போட்டியாளரான ரிஷி சுனக்கை தோல்வியடைய செய்த லிஸ் ட்ரஸ் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  பதவியேற்று 45 நாட்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் லிஸ் ட்ரஸ்.

இங்கிலாந்து வரலாற்றிலேயே மிகவும் குறுகிய கால பிரதமராக பதவி வகித்தவர் லிஸ் ட்ரஸ்ஸே ஆவார். 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                           -நப்பசலையார்

இதையும் படிக்க:    இங்கிலாந்தின் பிரதமராகும் லிஸ் ட்ரஸ் யார்? அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள்!!!!!!