தனிநாடு முழக்கத்தை மீண்டும் கையிலெடுக்கிறதா திமுக? 

தனிநாடு முழக்கத்தை மீண்டும் கையிலெடுக்கிறதா திமுக? 

நாமக்கலில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராச, மத்திய அரசு மாநில சுயாட்சியை மறுப்பதன் மூலம் தனி நாடு பிரிவினைக்கு தமிழ்நாட்டை தள்ளுகிறது என்று கூறினார். இது தொடர்பாக அவர் பேசும் போது, தனிநாடு கோரிய ஆ. ராசா: 
”அனைத்து மாநிலங்களும் ஒன்றே என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒன்றுமை வேண்டுமெனில் இந்தி கற்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார். கட்சி நிறுவனர் தந்தை பெரியார் இறக்கும் வரை தனிநாடு கோரினார்.  ஆனால், நாங்கள் நாட்டின் ஒற்றுமையையும் மக்களாட்சியையும் கருத்தில் கொண்டு அக்கோரிக்கைக்கு புறம்பாக இருக்கிறோம்” என முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே ஆ. ராசா பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக, அவர் மேலும் கூறுகையில், ”இதை நான் அதிக அளவு மனிதநேயத்துடன் கூறுகிறேன்.  எங்கள் முதல்வர் அண்ணாவின் பாதையை பின்பற்றுகிறார்.  எங்களை பெரியாரின் பாதையை பின்பற்ற தூண்டாதீர்கள்.  தனி மாநில கோரிக்கையை புதுப்பிக்க செய்ய முயலாதீர்கள்.  எங்களுக்கு மாநில சுயாட்சி வழங்குங்கள்” எனக் குறிப்பிட்டார்.


60 ஆண்டு கால கருத்தை பேசினார் ஆ. ராசா:


மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சு குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். அதில், தனிநாடு கோருவது கட்சியின் கோரிக்கை அல்ல, மத்திய அரசு மாநில சுயாட்சியை விலக்கிய விதம் ஆ.ராசாவிற்கு ஏமாற்றம் அளித்ததால் அவர் கோபத்தில் கூறியிருக்கலாம் என விளக்கம் அளித்துள்ளார். ஆ. ராசா பேசியது கட்சிக்கு எதிரான கருத்து எனவும், அதே சமயத்தில், கடந்த 60 ஆண்டுகளாக திமுக வலியுறுத்தும் நிலைப்பாடு எனவும் விளக்கினார். அதிகார பகிர்வு மாநில வளர்ச்சிக்கு உதவுகிறது.  அதை போல் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவுகிறது எனவும் கூறினார்.

ஆ.ராசா பேச்சுக்கு பாஜக – அதிமுக எதிர்ப்பு: 


மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் பேச்சு, பிரிவினை வாதத்தை தூண்டுவதாக பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்தியன் கூறுகையில், திமுக பிரிவினை விதையை மாநிலத்தில் விதைக்கிறது. ஆ. ராசாவின் பேச்சு அதை உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டார். மேலும், ”திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது, மத்திய அரசு என்றும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய அரசு என்று அழைப்பது திமுகவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் என விமர்சித்தார்.  

இது தொடர்பாக, தமிழ்நாடு பாஜகவின் பொதுச்செயலாளர் கரு நாகராஜன் “பிரிவினை கருதுக்களை பாஜக ஒருபோதும் பொறுத்துகொள்ளாது, தனிநாடு என்ற கொள்கையை தமிழ் மக்களும் ஏற்று கொள்ளமாட்டர்கள் எனக்கூறினார்.  

திமுகவும் தனிநாடு நிலைப்பாடும் கடந்து வந்த பாதை: 

மாநில தன்னாட்சி என்பது 1960களிலிருந்தே திமுகவின் முக்கிய அரசியல் கொள்கைகளுள் ஒன்றாக இருந்து வருகிறது.  அதன் தேர்தல் அறிக்கைகள் கூட்டாட்சி கொள்கையுடன் தொடங்குகிறது.  16-வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் பிரிவினைக்கு முற்று புள்ளி வைக்க முயன்றதை தொடர்ந்து 1963ல் தனிநாடு கோரிக்கை அண்ணா கைவிட்டார்.  


கூட்டாட்சி முறையில் மத்திய மாநில உறவை ஆராய 1969-ல் திமுக முயற்சியால் ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டது.


மத்திய அரசு புதிய சட்டம் நிறைவேற்றும் முன் மாநிலங்களுடன் கலந்துரையாட மாநிலங்களுக்கு இடையேயான குழு ஒன்று அமைக்க ராஜமன்னார் குழு பரிந்துரை செய்தது. 1971ல் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி அமைத்த திமுக மீண்டும் அதன் கோரிக்கையை வலியுறுத்தியது. 1974ல் தமிழக  சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து மாநில சுயாட்சியை தமிழ்நாடு அரசு கோரியது.