ஓஹோ... ப்ராடா இந்த ஆர்.கே.சுரேசு!?... என்னா ஒரு தில்லாலங்கடி வேல... இதுல ஜாதி பெரும பீத்தல் வேற..

நடிகர் சுரேஷ் மீது மோசடி புகார்..!

ஓஹோ... ப்ராடா இந்த ஆர்.கே.சுரேசு!?... என்னா ஒரு தில்லாலங்கடி வேல... இதுல ஜாதி பெரும பீத்தல் வேற..

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீது எழுந்துள்ள மோசடி புகார் குறித்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம், விசாரணை நடைபெறுகிறது என கூறி ஓட்டம் பிடித்துள்ளார். என்னப் புகார்? அவர் ஓட்டம் பிடித்ததற்கான காரணம் என்ன?

தம்பிக்கோட்டை படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமா துறையில் நுழைந்தவர் ஆர்.கே.சுரேஷ். தொடர்ந்து பல படங்களுக்கு தயாரிப்பாளராகவும், திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.  2016-ம் ஆண்டு வெளியான தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்களை வசமாக்கினார். அதன் பின் பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்த இவர், பில்லா பாண்டி படத்தில் நாயகன் ஆனார். 

தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் திரைப்பட விநியோகஸ்தராகவும், மலையாளப் படங்களிலும் நடிகராகவும் வலம் வருபவர். கடந்த ஆண்டு ஊரடங்கில் திரைப்பட பைனான்சியரான மது என்பவரை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், இவர் மீது விழுப்புரத்தைச் சேர்ந்த வீணா என்பவர் பண மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அந்தப் புகாரில் ஆர்.கே சுரேஷ் தனது கணவர் ராமமூர்த்தியிடம் 10 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாகக்கூறி  1 கோடி ரூபாய் வாங்கியும், அவரது இடத்தை தனது பெயருக்கு மாற்றி அந்த பத்திரத்தை வங்கியில் வைத்து 4.5 கோடி ரூபாய் கடன் பெற்றும் மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆர்.கே சுரேஷை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். விசாரணைக்கு நேரில் ஆஜரான ஆர்.கே.சுரேஷ், தன் மீது பொய் புகார் அளித்த வீணா மீது நடவடிக்கை எடுக்கும் படி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். 

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது சொந்த வீட்டை விற்க முடிவு செய்த நிலையில், கமலக்கண்ணன் என்ற புரோக்கர் மூலம் வீணா அறிமுகமானதாக தெரிவித்தார். அவ்வாறு வீட்டை விற்ற போது வீணா மூன்றாம் நபர் மூலம் ரூ.93லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தியதாகவும், அதன் பின்னர் அவர்களின் மோசடி தெரியவர தான் அந்த தொகையை மீண்டும் அந்த மூன்றாம் நபரிடம் கொடுத்ததற்கான ஆதாரத்துடன் வீணா மீது புகார் அளித்துள்ளதாக கூறினார். 

தற்போது வீடு யார் பெயரில் உள்ளது? வீடு பெயர்மாற்றம் செய்யபட்டது உண்மை என்றால் நீங்கள் இன்னும் வீட்டை காலி செய்யாமல் அங்கேயே இருக்க காரணம் என்ன? என்று செய்தியாளர்களை அடுக்கடுக்காக கேள்வி கனைகளை சுரேஷிடம் தொடுக்க, அனைத்து கேள்விக்கும் காவல்துறை அதிகாரிகள் கூறுவதுபோல் விசாரணை நடைபெற்று வருகிறது எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

இந்த இரு புகார்கள் மீதான விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடங்கியுள்ளனர். மோசடி செய்தது யார்?வீட்டை ஏமாற்றியது யார்? என்ற பல்வேறு கோணங்களில் இருவரையும் தொடர்ந்து நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.