3-வது அலை வருவதற்குள் தற்போதே குழந்தைகளை தாக்குகிறதா கொரோனா? சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்  

காஞ்சிபுரத்தில் கடந்த 20 நாட்களில் ஒரு வயது குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை 258 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3-வது அலை வருவதற்குள் தற்போதே குழந்தைகளை தாக்குகிறதா கொரோனா? சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்   

காஞ்சிபுரத்தில் கடந்த 20 நாட்களில் ஒரு வயது குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை 258 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையானது வேகமெடுத்து நோய் தொற்றானது கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவில் பரவி பெரும் பாதிப்பையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வந்தது. இதனால் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசானது தொற்றினை குறைக்கும் வகையில் கொரோனா பரிசோதனை முகாமினை அதிகபடுத்தியும், பாதிப்புடையவர்களுக்கு சிகிச்சைகள் அளித்தும் படிப்படியாக தொற்றினை குறைந்துள்ளது. அதேபோல் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. கடந்த முதல் அலையில் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களிடையே அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா, தற்போது இரண்டாம் அலை 50 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் சமீப நாட்களாக 1 வயதுடைய குழந்தைகளுக்கே கொரோனா தொற்று அதிகம் உறுதியாகி வருகிறது. கடந்த 29ஆம் தேதி முதல் இம்மாதம் 19ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 முதல் 15 வயதிற்கு உட்பட்ட 258 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதாரத்துறையின் அறிக்கைமூலம் உறுதியாகியுள்ளது.

மேலும் அதில் 1 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட 48 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும், இதன்காரணமாகவே குழந்தைகளுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.