விரைவில் மாநில மாநாடு நடத்த அதிமுக முடிவு...ஏன் தெரியுமா?

விரைவில் மாநில மாநாடு நடத்த அதிமுக முடிவு...ஏன் தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் மிகப்பெரிய அளவில் மாநில மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து பேசிய ஈபிஎஸ்:

இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து நிர்வாகிகள் முன்பு பேசியுள்ளார். குறிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு மாவட்ட மற்றும் கிளை வாரியாக அனைவரும் ஆயுத்தமாக இருக்க வேண்டும் என்றும், வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எந்த ஒரு கட்சியும் மதவாத கட்சியாக இருந்தால் ஜனநாயகமே அழிந்துவிடும்... மாநாட்டில் முதலமைச்சர் உரை!

மாநில மாநாடு நடத்த முடிவு:

தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் மிகப்பெரிய அளவில் மாநில மாநாடு நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக முடிவு செய்துள்ளது. ஏனென்றால், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அதிமுகவின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மக்களிடையே கொண்டு செல்லவும் தான், மிகப்பெரிய அளவில் மாநில மாநாடு நடத்தப்படுவதாக அதிமுக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாபெரும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எழுச்சி ஏற்படும்:

எனவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய அளவில் மாநில மாநாடு நடத்துவதற்கு அதிமுக முடிவு செய்து இருப்பது, அதிமுகவின் கடைக்கோடியில் உள்ள  தொண்டர்கள் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும் என்றே அதிமுக தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கின்றது.