நடக்கும் அநியாயங்களைப் பார்க்க முடியாமல் ராஜினாமா செய்ய முடிவெடுத்த எம்.எல்.ஏ!

பட்டியலின மக்கள் மீது நடக்கும் குற்றங்களை சகிக்க முடியாமல், ராஜஸ்தான் எம்.எல்.ஏ ஒருவர், தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடக்கும் அநியாயங்களைப் பார்க்க முடியாமல் ராஜினாமா செய்ய முடிவெடுத்த எம்.எல்.ஏ!

சமீபத்தில் ராஜஸ்ஹானில் பல கொடூர சம்பவங்கள் நடந்து வருகின்றது. நூபுர் ஷர்மா சர்ச்சைத் தொடங்கி, தற்போது, பட்டியலின சிறுவனை அடித்தே கொன்றது வரை அனைத்தும் உலக அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பானா சந்த் மேக்வால், தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறி, தனது ராஜினாமா கடிதத்தை ராஜஸ்தான் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சிறுவன் கொலை:

76வது சுதந்திர் தினம் நேற்று இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், ராஜஸ்தானில், பல குடும்பங்கள் கண்ணீரில் மூழ்கியிருந்தது. ஒரு பட்டியலின சிறுவன், ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஆசிரியரின் குடத்தில் இருந்து அனுமதியின்றி தண்ணீர் குடித்ததன் காரணமாக, அவர் அடித்தே கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

வேதனைப்படுகிறேன்!

இது குறித்து மெக்வால் பேசியபோது, “நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன். என் சமூகம் என் கண் முன்னே சித்திரவதை செய்யப்படுவதை வார்த்தைகளில் என்னால் வெளிப்படுத்தமுடியவில்லை” என்று கூறினார்.

அநியாயங்கள் அதிகரிக்கின்றனர்:

தொடர்ந்து பேசும் போது, பட்டியலின மக்கள், அவர்களது சாதி கரணமாக மட்டுமே வைத்து, குடத்தில் தண்ணீர் குடித்தாலும், மீசையை முறுக்க, ஏன், தனது திருமணத்தில் குதிரை சவாரி செய்ததற்கு கூட கொலை செய்யப்படுகின்றனர். வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், அவை மேஜை விட்டு மேஜை தாண்டுகிறதே தவிற, ஒரு வேலையும் நடப்பது போல தெரியவில்லை. மேலும், பட்டியலின மக்களுக்கு நடக்கும் அநியாயங்கள் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்றைய சட்டம், நம் பட்டியலின சமூகத்தைக் காக்க உதவியாக இல்லை என கூறினார்.

iது தொடர்ந்து, அவர் தனது ராஜினாமா கடித்தைத்தை ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கேலோட்டிற்கு அனுப்பியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.