” காரல் மார்க்ஸும் தனிமனித வளர்ச்சியில் தான் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அது வேறு விதத்தில்” - ஆளுநர் ரவி.

ராணுவத்திலும் பொருளாதாரத்திலும் மட்டும் வலிமையாக இருந்தால் போதாது,.....”

” காரல் மார்க்ஸும் தனிமனித வளர்ச்சியில் தான் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அது வேறு விதத்தில்”    - ஆளுநர் ரவி.

இந்தியா ராணுவத்திலும் பொருளாதாரத்திலும் மட்டும் வலிமையாக இருந்தால் போதாது இந்தியர் அனைவரும்  ஒரே குடும்பமாகவும் வலிமையாக இருக்க வேண்டும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். 

பாஜகவின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபத்தியாயா குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர். என் ரவி பேசுகையில்:- 

” ஒவ்வொரு தனி மனிதர்களின் உரிமை பாதுகாக்கபட வேண்டியது தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை,ஆனால் சமுதாயத்தில் தனி மனித வளர்ச்சி என்பது நிறைய பிரச்சனைகளை உருவாக்கும்.

ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தால்தான் நீர் உருவாகும். உலகத்தில்  ஒவ்வொருவரையும் தனித்தனியாக பார்ப்பதால் தான் இடையூறு ஏற்படுகிறது.” என்று கூறினார். 

தொடர்ந்து பேசுகையில்,.

.“ காரல் மார்க்ஸும் தனிமனித வளர்ச்சியில் தான் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அது வேறு விதத்தில்.,..

குடும்பமாக இருப்பதிலும் சமூகமாக இருப்பதிலும் காரல் மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.. ஏனென்றால் தனிமனித வளர்ச்சியை குடும்பம் தடுக்கும் என்று அவர் நம்பினார்.அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல.  

ஏகாதிபத்தியத்தை நான் எதிர்க்கிறேன்.   ஆனால் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இது ஒரு வரலாற்றுத் தேவையாக மாறிப்போனது. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் சமூக கட்டமைப்பை சீர்குலைத்தார்கள்.  காரல் மார்க்ஸ் போன்றவர்கள் நம்முடைய அனைத்து வகையான உணர்ச்சிகளையும் வேதியல் மாற்றம் என்று சொன்னார்கள். அவர்கள் கூறியது இன்று வரை பிரதிபலிக்கிறது. 

டார்வின் என்கின்ற ஒரு சிறந்த மனிதர்  ’குரங்கிலிருந்து தான் மனிதர்கள் வந்தார்கள்; என கூறினார் என்று, நகைப்புடன் கூறிய ஆளுநர்,  நாம் அனைவரும் பள்ளி கல்லூரிகளில் என அனைத்திலும் டார்வின் கோட்பாட்டை படித்தோம்; அனைவரும் அதை நம்புவதில்லை, ஆனால் சிலர் அதனை முழுமையாக நம்புகிறார்கள். 

இதன் வழியாக தான் புரட்சி ஏற்பட்டது என்றும்  நாம் அனைவரும் குரங்கிலிருந்து தான் பரிணமித்தோம் என்பதையும் டார்வின் கூறினார்.

டார்வின் முதலாளித்துவத்தின் தார்மீகதை நியாயப்படுத்தினார். தற்போதும் இந்தியாவில் இதைக் குறித்து(குரங்கில் இருந்து தான் மனிதன் வந்தான் என்பது) நாம் விவாதித்து வருகிறோம்; படித்து வருகிறோம். தேர்வுகளிலும் கேள்விகளாக கேட்கப்படுகிறது. இந்திய குடிமை பணி தேர்வுகளில் கூட இது குறித்த கேள்விகள் வருகிறது என நகைப்புடன் கூறினார் ஆளுநர்.

இதையும் படிக்க    |  மொழியின் அடிப்படையில் இளைஞர்களின் தகுதியை காண்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி..! - பிரதமர்.