மொழியின் அடிப்படையில் இளைஞர்களின் தகுதியை காண்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி..! - பிரதமர்.

மொழியின் அடிப்படையில் இளைஞர்களின் தகுதியை காண்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி..! - பிரதமர்.

திறமையின் அடிப்படையில் இளைஞர்களின் தகுதியைப் பார்க்காமல் மொழியின் அடிப்படையில் காண்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புதிய தேசியக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்.

பின்னர் குழந்தைகள் ஓவியம் வரைவதைப் பார்வையிட்டு, குழந்தைகளின் இசை நிகழ்ச்சியையும் பார்வையிட்டார். 

இதனைத்தொடர்ந்து பிரதமரின் ஸ்ரீ திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியின் முதல் தவணையை வழங்கினார்.

பின்னர் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றும் சக்தி கல்விதான் என்றும் ஒரு நாடு தனது இலக்கை அடைந்து முன்னேறுவதில் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.  

புதிய கல்விக் கொள்கையானது பாரம்பரிய கல்வி முறையின் முக்கியத்துவத்தையும் எதிர்கால தொழில்நுட்பத்திற்கான முக்கியத்துவத்தையும் சரிசமமாகக் கொண்டுள்ளதாக கூறினார்.  திறமையின் அடிப்படையில் இளைஞர்களின் தகுதியைப் பார்க்காமல் மொழியின் அடிப்படையில் காண்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.

இதையும் படிக்க    |  தென்னிந்தியாவின் மிக நம்பகமான நிறுவனமாக ஜி-ஸ்கொயர் தேர்வு!