ரூ.404 கோடி மதிப்பில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - தமிழ்நாடு அரசு உத்தரவு.!

ரூ.404 கோடி மதிப்பில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - தமிழ்நாடு அரசு உத்தரவு.!

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 
31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15,75,900 மாணவ, மாணவியரகள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுப் படுத்தப்படுவதால் அதற்கான 
செலவு மேற்கொள்ள 404 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை அமல்படுத்திய பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு திட்டம் விரிவாக்கம்  செய்யப்படும் எனவும், 

சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு மாநகராட்சி ஆணையரும், ஏனைய மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பள்ளிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும்,  ஊரகப்பகுதிகளில் உள்ள 28 ஆயிரம் பள்ளிகளுக்கு காலை உணவுத்திட்டத்தினை செயல்படுத்தும் பொறுப்பு அலுவலராக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் நியமனம் செய்யப்படுவார்.

காலை உணவுத்திட்டத்தினை செயல்படுத்தும் போது வாரத்தில் குறைந்தது இரு நாட்களிலாவது அந்தந்த பகுதியில் கிடைக்கும் சிறு தானியங்களை கொண்டு உணவு தயாரிக்க வேண்டும்.

இதையும் படிக்க   | அரசுப்பள்ளியில் போதிய இடவசதி இல்லை... சாலையின் இருபுறமும் அமர்ந்து கற்கும் மாணவர்கள்!!