பெட்ரோலை தொடர்ந்து டீசலும் ரூ.100-ஐ தொட்டதால் வாகன ஓட்டிகள் கவலை!

ராஜஸ்தானில் டீசல் விலையும் 100 ரூபாயாக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோலை தொடர்ந்து டீசலும் ரூ.100-ஐ தொட்டதால் வாகன ஓட்டிகள் கவலை!

 

ராஜஸ்தானில் டீசல் விலையும் 100 ரூபாயாக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை தற்போது 100 ரூபாயை தாண்டியுள்ளது.  நேற்று பெட்ரோலுக்கு 27 காசுகளும் டீசலுக்கு 23 காசுகளும் அதிகரித்து இருந்தது. இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ 100-ஐ கடந்துவிட்டது.

 

அந்த வகையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, லடாக் ஆகிய மாநிலங்களில் 100 ரூபாயை கடந்து பெட்ரோல் விற்கப்படுகிறது. இந்த வரிசையில் 7ஆவது மாநிலமாக கர்நாடகாவும் இணைந்துவிட்டது. இங்கும் பல இடங்களில் 100 ரூபாயை கடந்து பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே ராஜஸ்தானில் டீசல் விலையும் நேற்று ரூ 100- ஐ தொட்டுவிட்டது. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.