கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் இந்த 3 பேர்... சமாளிக்கவே முடியலல்ல? டறியலாகும் பாஜக..

கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் இந்த 3 பேர்... சமாளிக்கவே முடியலல்ல? டறியலாகும் பாஜக..

பாஜகவிற்கு தமிழ்நாடு மட்டுமல்ல, இந்த பக்கம் கேரளா, அந்த பக்கம் மேற்குவங்கம் என மும்முனை பக்கமும் வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காகி வருகின்றனர். 

தமிழகத்தை பொறுத்துவரை திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த சில நாட்களாகவே மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாகவுள்ளார். அண்மையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சி முறை தொடர்பாகவும் மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். சும்மா புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்ததால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே அதிர்ந்துபோனார்.

இந்த நிலையில், பாஜகவின் மூத்த நிர்வாகியான ஹெச். ராஜா தமிழக நிதியமைச்சரான பி.டி.ஆர், ஈஷா விவகாரத்தில் தலையிட்டதால் அவரை கடுமையாக விமர்சித்தார். பின்னர் பி.டி.ஆரோ ஹெச். ராஜா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வெறிப்பிடிச்ச நாய் குரைப்பதற்கெல்லாம் தன்னால் பதில்கூறமுடியாது என்றும் காட்டமாக கூறினார்.

இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொண்டனர். இதுஒருபுறம் இருக்க, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக பி.டி.ஆரை எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் டேக் செய்தார். இதனால் கடுப்பான அவர், வானதியை டிவிட்டர் பக்கத்தில் இருந்து பிளாக் செய்தார். இப்படி, பாஜகவை சேர்ந்த ஒவ்வொருவரையும் அதகளப்படுத்தி வருகிறார் பி.டி.ஆர்… 


சரி வாங்க, மேற்குவங்கம் பக்கம் போலாம்னு, பாஜகவினர் அங்கிருப்பவர்களை சீண்ட திட்டமிட்டனர். ஆனால் வங்கப்புலியான மேற்குவங்க முதல்வர் மம்தாவோ அவர்களது திட்டத்தை தவிடுபொடியாக்கி வருகிறார். குறிப்பாக மேற்குவங்க தலைமைச்செயலாளரை திரும்ப பெறுவதாக மத்திய அரசு உத்தரவிட்டும், அவரை அனுப்ப முடியாது என மம்தா பதிலடி கொடுத்தது, பிரதமரை 30 நிமிடம் காக்கவைத்தது என அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.  

 


மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலுவாக இல்லாத நிலையில், மம்தா பானர்ஜி வலுவான தலைவராக உருவெடுத்துக்கொண்டு இருக்கிறார். அதிலும் மோடி, அமித் ஷாவை நேரடியாக எதிர்ப்பது, அவர்களின் பாணியிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுப்பது என்று மமதா பானர்ஜியின் அரசியல் ஸ்டைல் பாஜகவை லேசாக ஜெர்க் ஆக வைத்துள்ளது. மேலும் மம்தாவை மேற்குவங்க மக்கள் தற்போதே அடுத்த பிரதமர் அவர் தான் என கோஷமிட்டு வருகின்றனர்…இதனால் இங்கு தங்களது ராஜ தந்திரங்கள் வெற்றிபெறவில்லையே என பாஜக மண்ணைகவ்விக்கொண்டு திரும்பியது. 

இதற்கிடையே தன் பங்கிற்கும் மத்திய பாஜக-விற்கு லட்சத்தீவு விவகாரத்தில் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது கேரள பினராயி விஜயனின் அரசு… குறிப்பாக லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோட்டா படேலைத் திரும்பப் பெற வேண்டும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி தங்கள் பங்கிற்கு பாஜகவை பந்தாடினர்..

இப்படி மாறி மாறி தமிழகம், கேரளா, மேற்குவங்கம் என பாஜகவினருக்கு எதிராக செயல்பட்டு வருவதால் விழிபிதுங்கி வருகின்றனர் பாஜக தரப்பு…