சிட்டிசன் படம் போல உண்மையில் தொலைந்து போன கிராமம்.! 70 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு.!

சிட்டிசன் படம் போல உண்மையில் தொலைந்து போன கிராமம்.! 70 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு.!

பிரபல நடிகர் அஜித் நடித்த ‘சிட்டிசன்’ படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல் போய் இருக்கும். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து அந்த ஊர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். அதே போல இல்லாவிட்டாலும் அப்படி ஒரு சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது.

குரோன் என்ற கிராமம் இத்தாலியில் உள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தின் அருகில் இருந்த இரண்டு ஏரிகளை இணைக்க முற்பட்டபோது வெள்ளம் ஏற்பட்டு அந்தக் கிராமம் நீருக்குள் மூழ்கியது. இந்த அழிவு காரணமாக அந்த கிராமத்தில் குடியிருந்த சுமார் 160க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். அதன் பின் அப்படி ஒரு கிராமம் இருந்ததே கிட்டத்தட்ட மறந்து போனது.

இந்நிலையில் தற்போது கடுமையான வறட்சி காரணமாக அந்த கிராமத்தை சூழ்ந்த நீர் வறண்டு போனது. இதன் காரணமாக அந்த கிராமம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் அந்த கிராமம் ஒரு சுற்றுலா தளமாக மாறியுள்ளது. நீரிலிருந்து வெளியே தெரியும் தொலைந்த கிராமத்தின் சுவர்கள், படிகள் மற்றும் பாதாள அறைகள் போன்றவற்றின் படங்களை சமூக வலைதளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் அந்த இடத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.