77 ஆண்டுகளுக்கு முன்பிருந்த உலகம் இதுவல்ல....நம்முன் உள்ள சவால்களும் தீர்வுகளும்....

77 ஆண்டுகளுக்கு முன்பிருந்த உலகம் இதுவல்ல....நம்முன் உள்ள சவால்களும் தீர்வுகளும்....

சீர்திருத்தம் இல்லாமல், பாதுகாப்பு கவுன்சில் உண்மையான பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.  இந்தியா வெளியிட்ட கருத்துக் குறிப்பில் பயங்கரவாதம், தீவிரவாதம், தொற்றுநோய் மற்றும் புதிய உலகளாவிய சவால்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. 

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தப்பட்ட பலதரப்பு கூட்டத்திற்கு முன்பாக இந்தியா பல முக்கிய செய்திகளை உலகிற்கு வழங்கியுள்ளது.  இதன் கீழ், ஐ.நா. அவையில் சீர்திருத்தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.  

இந்தியாவின் இந்த குறிப்பில், நேர வரம்புகள் இல்லாமல், பாதுகாப்பு கவுன்சில் உண்மையான பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது எனவும் பயங்கரவாதம், தீவிரவாதம், தொற்றுநோய் மற்றும் புதிய உலகளாவிய சவால்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

77 ஆண்டுகளுக்கு முன்பிருந்த...:

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ், ஐ.நா. வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கு எழுதிய கடிதத்தில், பயங்கரவாதம் போன்ற தீவிரமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முக்கியமான கருத்துக் குறிப்பு இருக்க வேண்டும் என எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் தீவிரவாதம் முதல் பசி வரை அனைத்தையும் விவாதித்துள்ளார் ருசிரா கம்போஜ்.  

மேலும் அவர் 77 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உலகம் இப்போது இல்லை எனவும் ஐ.நா.வின் தற்போதைய 193 உறுப்பு நாடுகள் என்ற எண்ணிக்கையானது 1945ல் இருந்த 55 உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  எவ்வாறாயினும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பாதுகாப்புச் சபையின் அமைப்பு, கடைசியாக 1965 இல் தீர்மானிக்கப்பட்டது எனவும் பரந்த ஐ.நா உறுப்பினர்களின் உண்மையான பன்முகத்தன்மையை இதில் பிரதிபலிக்கவில்லை எனவும் ருசிரா குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

புதிய சவால்களும் தீர்வும்:

கடந்த எழுபது ஆண்டுகளில் புதிய உலகளாவிய சவால்கள் உருவாகியுள்ளன எனவும் பயங்கரவாதம், தீவிரவாதம், தொற்றுநோய்கள், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் அச்சுறுத்தல்கள், வளர்ந்து வரும் சமச்சீரற்ற சூழல்கள், மற்றும் தீவிரமான புவிசார் அரசியல் போட்டி போன்றவை அவற்றில் சில எனவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இந்த சவால்கள் அனைத்தும் வலுவான பலதரப்பு பதிலுக்கு அழைப்பு விடுக்கின்றன எனவும்  சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மைக்கு ஐ.நா. அவையை மையமாகக் கொண்டு, அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய மூன்று தூண்களிலும் சீர்திருத்தத்தை எதிர்பார்க்கிறது இந்தியா என எழுதியுள்ளார் ருசிரா கம்போஜ். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   அமெரிக்காவில் சீனாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்...காரணம் என்ன?!!