பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் பலி!

பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் பலி!

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நாட்டின் பெரும் பகுதிகள் வெள்ளக்காடான நிலை ஏற்பட்டது. குறிப்பாக பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, சிந்து மாகாணங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய வண்ணம் இருந்தது.  மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1290 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 7 லட்சத்து 23 ஆயிரத்து 919 குடும்பங்களுக்கு ஆயிரத்து 825 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.