ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிகழ்வில் மோடி...விருந்தை புறக்கணித்த தலைவர்கள்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிகழ்வில் மோடி...விருந்தை புறக்கணித்த தலைவர்கள்!

இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியன ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த அமைப்பில் புதிதாக தற்போது ஈரானும் இணைந்துள்ளது. இந்த கூட்டமைப்பின் 22வது மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்க்கண்ட் நகரில் நேற்று வானவேடிக்கைகளுடன் தொடங்கியது.

விருந்தை புறக்கணித்த தலைவர்கள்

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று உஸ்பெகிஸ்தான் சென்ற இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற குழு நிகழ்ச்சிகளை புறக்கணத்த மோடி, இரவு விருந்திலும் பங்கேற்கவில்லை. இதே போல சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரும் இந்த விருந்தை புறக்கணித்தனர்.

குழு புகைப்படம்

இந்தநிலையில் 2 ஆவது நாளாக இன்று தலைவர்கள் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். குறிப்பாக பயங்கரவாத செயல்களை ஒடுக்குவது குறித்தும், சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்தும்  ஆலோசிக்கப்படவுள்ளது. முன்னதாக மாநாட்டு மேடைக்கு வந்த தலைவர்கள் அந்தந்த நாட்டின் கொடிகளுக்கு முன் நின்று குழுப் புகைப்படம் எடுத்து கொண்டனர்.