இலங்கை பொருளாதார நெருக்கடி...எளிமையான முறையில் தீபாவளி கொண்டாட்டம்! 

நுவரெலியா அட்டன் பகுதியில் அட்டன் அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி சிறப்பு சமய வழிபாடுகள் நடைபெற்றன.

இலங்கை பொருளாதார நெருக்கடி...எளிமையான முறையில் தீபாவளி கொண்டாட்டம்! 

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ள நிலையில், வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதி  மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்றைய தீபாவளி பண்டிகையை எளிமையான முறையில் கொண்டாடி வருகின்றார்கள்.

தீபாவளி 

தீபாவளியை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றன. இன்று காலை வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றன. நுவரெலியா அட்டன் பகுதியில் அட்டன் அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி சிறப்பு சமய வழிபாடுகள் நடைபெற்றன.
 
பூசையில் மக்கள் பங்கேற்பு

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது நாட்டிற்கு நன்மை வேண்டியும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நீங்கி நாடு சுபீட்சமடையவும் விசேட யாகம் மற்றும் அபிசேகமும் நடாத்தப்பட்டது. இன்றைய தீபாவளி பூசை வழிபாடுகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.