தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் பெண்கள்.. எங்கள் உரிமைக்காக ஆயுதம் தூக்கியதாக பெருமிதம்.! 

தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் பெண்கள்.. எங்கள் உரிமைக்காக ஆயுதம் தூக்கியதாக பெருமிதம்.! 

தாலிபான்களை எதிர்த்து போராடும் ஆப்கானித்தானிய பெண்களின் புகைப்படம் சர்வதேச அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.  

ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வெளியேறிய பிறகு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் இணைந்து தாலிபான் அமைப்பு  ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதன்பின் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தி பல்லாயிரம் பேரை கொலை செய்த ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை தாக்கி கைப்பற்றியது.

அதன்பின் அங்கு தாலிபான் அமெரிக்க படைகள் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும் தாலிபான் அல்லாத புதிய அரசும் ஆப்கானிஸ்தானில் அமைந்தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலிபான் அமைப்பு மற்றும் ஆப்கன் அரசுக்கு இடையே, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. ஆனால், முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க பாதுகாப்புப் படை திரும்பப் பெறப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அமெரிக்க உள்ளிட்ட நேட்டோ படைகள் வெளியேறவுள்ள நிலையில், இது அந்த பிராந்தியத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தால் அங்கு தாலிபானின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஆப்கானிஸ்தானின் அரச படைகளுடன் இணைந்து, பெண்களும் தாலிபானை எதிர்த்து போராட ஆயுதம் எடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தாலிபான்களை அரசு படைகள் தனியாக எதிர்த்து போராடமுடியாது. ஆகவே நாங்களும் அவர்களோடு இணைந்து போராடுகிறோம். எனக் கூறியுள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்த காலத்தில் அங்கு பெண்கள் வெளியே செல்லவும், கல்வி கற்கவும், வேலை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. அதை மீறும் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இதன் காரணமாக அங்கு தாலிபான் ஆட்சிக்கு எதிராக பெண்கள் போராட துணிந்துள்ளார்கள்.