இஸ்ரேலில் புதிய அரசு.... அமெரிக்க அதிபர் பைடன் வரவேற்பு

இஸ்ரேலில் புதிய அரசு பொறுப்பேற்று இருப்பதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் புதிய அரசு....  அமெரிக்க அதிபர் பைடன் வரவேற்பு

இஸ்ரேலில் 12 ஆண்டு காலமாக நீடித்த பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இந்தநிலையில் இஸ்ரேலில் புதிய அரசை வரவேற்று அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்ரேல் பாதுகாப்பிற்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன்,  அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான தனது  விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய மக்களிடையே  பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கு இஸ்ரேலின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற உறுதியளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.