மேற்குல நாடுகளை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ரஷ்யா

மேற்குல நாடுகளை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ரஷ்யா

ரஷ்யாவின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கான பொருட்களுக்காக மேற்குல நாடுகளை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் வலியுறுத்தியுள்ளார்.

தொழில்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான எந்த ஒரு பொருளையும் மேற்குலகிடம் இருந்து எதிர்பார்ப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றார்.

மீண்டும் உறவுகளைத் தொடர்வது குறித்து மேற்குலகம் ஏதாவது முன்மொழிந்தால் அப்போதும் ரஷ்யா இரு முறை யோசித்துத்தான் முடிவெடுக்கும் என்றும் குறிப்பிட்டார். நம் மீதான நம்பிக்கையை நிரூபித்த நாடுகளுடன் மட்டுமே ரஷ்யா என்றும் நட்பு பாராட்டும் என்றும் செர்ஜி லாவ்ரவ் தெரிவித்தார்.