தாலிபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை..........

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபான்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

தாலிபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை..........

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.இதில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை விநியோகம் செய்ய அமெரிக்க அதிகாரிகள் தாலிபான்களுக்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளனர்.

 கத்தாரில் நடைபெற்ற  இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பதற்காக தாலிபான்களை அங்கீகரிப்பதாக பொருளாகாது என்றும்  அமெரிக்கா மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது. ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பின்பு ஆப்கானிஸ் தானில் நடந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு மறுநாள் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி இருதரப்பும் 2020ஆம் ஆண்டு தோஹாவில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை பின்பற்ற ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அல்-காய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதைத் தாலிபான்கள் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தின் அம்சமாக உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை விநியோகம் செய்ய அமெரிக்க அதிகாரிகள் தாலிபன்களுக்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளனர் என்றும் ஆமிர் கான் முத்தாக்கி தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் குறித்து அமெரிக்க அரசு இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.