இது 140 கோடி மக்களின் பலத்தை காட்டுகிறது...!!!

இது 140 கோடி மக்களின் பலத்தை காட்டுகிறது...!!!

ஜி20 நிகழ்வுகளில் தனியார் துறை, பல்கலைக்கழகங்கள், சிவில் சமூகம் மற்றும் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலம் உலகளாவிய பிரச்சினைகளில் இந்தியா புதிய சிந்தனையை உருவாக்குகிறது.

ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ், ஜி20 மாநாட்டில் இந்தியா தலைமை வகிப்பது இந்தியாவின் 140 கோடி மக்களின் பலத்தை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.  அதை மக்களின் ஜி20 ஆக மாற்றுகிறோம் எனவும் ருசிரா கம்போஜ் பேசியுள்ளார். மேலும் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு, நிதி அமைச்சர்கள் சந்திப்பு, மத்திய வங்கிகளின் கவர்னர்கள் சந்திப்பு உள்ளிட்ட பல முக்கிய சந்திப்புகளை நாங்கள் நடத்தியுள்ளோம் என்றும் இந்திய பிரதிநிதி கூறியுள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற முறைசாரா சந்திப்பின் போது இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்த விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ரஷ்யா அமெரிக்கா இடையே தொடரும் பதற்றம்...!!!