போரில் தன்னார்வ ஊழியர்கள் உயிரிழந்த சோகம்.... 

போரில் தன்னார்வ ஊழியர்கள் உயிரிழந்த சோகம்.... 

உக்ரைன் போரில் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் இரண்டு போ் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 11 மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருகிறது.  இந்நிலையில்,  கிழக்கு உக்ரைனின் சோலேடார் நகரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ் பாரி, ஆண்ட்ரூ பாக்சா ஆகிய இருவரும் மீது பீரங்கி குண்டு வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை உறுதி செய்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.  மேலும் உக்ரைனில் இங்கிலாந்து குடிமக்கள் யாரும் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   உக்ரைனுக்கு போர் டாங்கிகளை வழங்கும் ஜெர்மனி.....