1,300க்கும் மேல் பலி... 5,000க்கும் மேற்பட்டோர் படுகாயம்... ஹைதி நிலநடுக்கத்தின் கோரம்...

ஹைதி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1,300க்கும் மேல் பலி... 5,000க்கும் மேற்பட்டோர் படுகாயம்... ஹைதி நிலநடுக்கத்தின் கோரம்...

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று முன்தினம் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்  7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஹைதியின் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 118 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ள நிலையில் சுமார் 13 ஆயிரத்து 600 கட்டிடங்கள் மண்ணில் புதைந்து தரைமட்டமாகியுள்ளதாகவும், நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி  5 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்றும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. மேலும் பொதுமக்களே தங்கள் உறவுகளை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.