ஏலியனை போன்று மாற விரும்பி மூக்கு, காது, விரல்களை நீக்கிய விசித்திர இளைஞர்! புகைப்படம் வைரல்

பிரேசிலில் ஏலியனை போன்று காட்சி அளிக்க விரும்பி மூக்கு, காது, விரல்களை நீக்கிய நபரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஏலியனை போன்று மாற விரும்பி மூக்கு, காது, விரல்களை நீக்கிய விசித்திர இளைஞர்! புகைப்படம் வைரல்

பிரேசில் நாட்டின் பிரையா கிராண்ட் பகுதியை சேர்ந்தவர் மிச்செல் ஃபாரோ டோ பிராடோ.  இவரது உடலில் 85 சதவீதம் அளவுக்கு டாட்டூ ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.  60-க்கும் கூடுதலான முறை தனது தோற்றம் மாறுவதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, அவரது தலையில் கொம்புகள் பதிய வைக்கப்பட்டு உள்ளன.  மூக்கின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு உள்ளது. வயிற்று பகுதியிலும் சில நீக்கங்களை செய்துள்ளார். ஏலியன் தோற்றத்தில் தனது கைகள் தெரிய வேண்டும் என்பதற்காக விரல்களில் ஒன்றையும் அவர் நீக்கியுள்ளார்.

இதற்காக கட்டூ மொரினோ என்ற மெக்சிகோ நாட்டை சேர்ந்த உடல் வடிவமைப்பாளர் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளார். இதுபோன்ற வித்தியாச தோற்றத்துடன் மிச்செல் வலம் வந்தபோதும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எப்போதும் தனக்கு ஆதரவாகவே உள்ளனர் என்று கூறி திகைக்க வைக்கிறார்.