ராணுவத்திலிருந்து திரும்பிய தந்தையை அழுதபடி வரவேற்ற சிறுமி

ராணுவத்திலிருந்து வீடு திரும்பிய தந்தையை சிறுமி ஒருவர் அழுதபடி வரவேற்று ஆரத்தழுவிய நிகழ்வு, காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

ராணுவத்திலிருந்து திரும்பிய தந்தையை அழுதபடி வரவேற்ற சிறுமி

உலக முழுவதும் தீவிரவாத செயலை ஒடுக்கும் விதமாக அமெரிக்கா தனது துருப்புக்களை பல்வேறு நாடுகளுக்கு ஆதரவாக சுழற்சி முறையில் அனுப்பி வருகிறது.

அந்தவகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய அமெரிக்க வீரர் ஒருவர், பல ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ஊரான டெக்சாஸுக்கு திரும்பியுள்ளார். அவரை வரவேற்கும்படி கையில் ‘Welcome Home Daddy’ பதாகையையுடன் நின்ற சிறுமி, தந்தையை கண்டதும் கண்ணில் நீர் வழிய தேம்பியபடி நின்றுள்ளார்.

இதையடுத்து வழக்கமான ராணுவ மரியாதைக்கு பின் திரும்பிய சிறுமியின் தந்தை, அவரை ஆரத்தழுவி கட்டி அரவணைத்துள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.